அரசியலில் கால் பதித்த விஜய்… தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட கோடி இழப்பு – வெளியான தகவல்!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்ததையடுத்து, அவரால் கோடி கணக்கில் இழப்பு ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலில் கால் பதித்த விஜய்
விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டுக் கொண்டிருந்த விஜயின் ரசிகர் மன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (02) அரசியல் கட்சியாக மாறியது.
அக்கட்சியானது ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், தேர்தலுக்கு முன் இருக்கும் இரண்டு வருடத்தை கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுப்படவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வந்ததால் தமிழ் சினிமாவிற்கு கோடி கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட கோடி இழப்பு
அரசியல் கட்சியின் பெயரை அறிவித்த நிலையில் அது பெரும் பரபரப்பை தேசிய அளவில் ஏற்படுத்தியது. அவர் வெளியிட்ட அறிக்கையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் GOAT படத்தை தொடர்ந்து, இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடிப்பேன் என கூறி சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனால் தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரும் இழப்பு ஏற்படக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரால் சுமார் 1000 கோடி ரூபாய் மேல் இழப்பு ஏற்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் நடிகர் விஜயின் நடிப்பில் இறுதியாக வெளியான லியோ திரைப்படம் சுமார் ரூ. 600 கோடி வசூலித்தது.
இதேபோன்று விஜய் நடிக்கும் படங்கள் ஓடிடி தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பும் போது அதிகமான பார்வையாளர்களையும் பெறுகிறது.
அடுத்தடுத்து விஜய் நடிக்கும் படங்கள் குறைந்தது ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இனி நடிக்கவே மாட்டேன் என அறிவித்தது, தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது சினிமாவில் இருந்து விலகினால் வருவாய் முழுமையாக பாதிக்கப்படும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் GOAT படத்தை தொடர்ந்து அடுத்ததாக எச்.வினோத் அல்லது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.