Vijayakanth – போண்டா மணியின் கடனை அடைத்தாரா விஜயகாந்த்?.. அதெல்லாம் பொய்.. காமெடி நடிகர் பெஞ்சமின் ஓபன் டாக்
சென்னை: வடிவேலு, விவேக் ஆகியோரின் காமெடிகளில் நடித்து வெகு பிரபலமானவர் போண்டா மணி. ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் அகதியாக தமிழ்நாடு வந்து கலைத்துறையில் வென்று காட்டியவர்.
கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் உயிரிழந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் தனது வீட்டில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது.
பாக்யராஜ் இயக்கிய பவுனு பவுனுதான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் போண்டா மணி. இலங்கையில் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த அவர் அங்கு நடந்த போர் சூழல் காரணமாக அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். இங்கு வந்து எப்படியோ பாக்யராஜின் தொடர்பு கிடைத்து சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். தொடர்ந்து போண்டா சாப்பிட்டதால் அவருக்கு போண்டா மணி என்று பெயர் வந்ததாக கூறுவதுண்டு.
வடிவேலு காம்போ: பவுனு பவுனுதான் படத்துக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த போண்டா மணிக்கு வடிவேலுவுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. வடிவேலு ஆரம்பத்தில் போண்டா மணியை தன்னுடன் சேர்த்துக்கொள்ள தயங்கினாலும் விவேக் செய்த பரிந்துரையின் அடிப்படையில் சேர்த்துக்கொண்டார். இருவரும் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் மெகா ஹிட்டடித்தன.
உடல்நலக்குறைவு: ஒருகட்டத்தில் போண்டா மணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்தன. இதனால் அவர் மருத்துவமனையில் டயாலிஸிஸ் செய்துகொண்டார். தான் உடல்நிலை சரியில்லாதபோது தனக்கு வடிவேலு உதவி செய்ய வேண்டும் என ஓபனாகவே கேட்டார் மணி. ஆனால் வடிவேலு செய்யவில்லை. மாறாக விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்டோர் அவருக்கு உதவி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.