மறைந்தார் விஜயகாந்த்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 26ம் தேதி இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.
வீட்டு வாசலில் காத்திருந்த தொண்டர்கள் விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்திற்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டதாகவும், மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்த போதிலும் இன்று காலமானார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.