கோபப்பட்டு கத்திய விஜயகாந்த்!.. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்!…
Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு புகழ்பெற்ற நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இன்று ஒட்டுமொத்த தமிழகமே அவரின் மறைவை எண்ணி வருத்தத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். சில ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் இருந்திருந்தாலும் இன்று அவர் இல்லை என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கருப்பு எம்ஜிஆர் என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமான நடிகராகத்தான் விஜயகாந்த் இருந்திருக்கிறார். அவரை போலவே பல நல்ல காரியங்களை இவர் எடுத்து செய்தார்.
இதையும் படிங்க: கவர்ச்சியே காட்டாமல் ரசிகர்களைத் தன் நடிப்பால் கட்டிப் போட்ட நாயகிகள்… இப்படியும் இருக்காங்
களா?ஏழை எளியவர்களுக்கு, இல்லாதோருக்கு தேவையான உதவிகளை செய்வது ,தன்னை தேடி வருவோரை வயிறார சாப்பிட வைப்பது என மக்களின் மொத்த அன்பையும் பெற்ற ஒரு நடிகராக இருந்தார் விஜயகாந்த். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான கே.ராஜன் விஜயகாந்தை பற்றி ஒரு தகவலை கூறினார்.
கவுன்சிலில் ஒரு மீட்டிங் நடக்கும் போது விஜயகாந்த் கே.ராஜனை மிகவும் தகாத வார்த்தைகளால் பேசிவிட்டாராம். அது உடனே பெரிதாகி கே.ராஜன் பேட்டியெல்லாம் கொடுத்து மறு நாள் பெரிய செய்தியாக மாறிவிட்டதாம்.
இதையும் படிங்க: அஜித்தோடு ஒரே மோட்டிவ் இதுதான்! சினிமாவை விட சுற்றுப்பயணத்தில் ஆர்வம் இருக்க காரணம் இதுதானா?
உடனே விஜயகாந்த் ராதாரவியை அழைத்து ‘அண்ணன் ஏன் இப்படி பேட்டியெல்லாம் கொடுத்து பெரிதாக்கிட்டாங்க? வீட்டிற்கு வரச் சொல் ’ என்று சொன்னாராம். அதன் படி கே.ராஜன் கேப்டன் வீட்டிற்கு செல்ல உடனே பிரேமலதா மோர் கொண்டு வந்து கொடுத்தாராம்.
பிறகு இருவரும் பேசி மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆனார்கள். கோவம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும்னு சொல்வார்கள். அது கேப்டனிடம் நிறையவே இருந்தது என கே.ராஜன் கூறினார்