கடைசியாக சினிமா கேமரா முன்பு நின்ற விஜயகாந்த்!.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ..
நடிகர் விஜயகாந்த் நேற்று காலை 6 மணியளவில் மியாட் மருத்துவமனையில் மரணமடைந்தார். இந்த செய்தி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 80களில் சினிமாவில் நுழைந்து படிப்படியாக முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இருபெரும் நடிகர்கள் இருந்தும் அவர்களுக்கு போட்டியாக விஜயகாந்தின் படங்களும் வசூலை அள்ளியது.
விஜயகாந்தின் பல திரைப்படங்கள் ரஜினி, கமல் படங்களை விட அதிக வசூலையும் பெற்றது. எம்.ஜி.ஆர், ரஜினி பாணியில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை கொண்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அரசியலுக்கு எம்.ஜி.ஆரையும், சினிமாவில் முன்னேற ரஜினியையும் முன் மாதிரியாக எடுத்துகொண்டார். ரஜினியை போலவே கமர்ஷியல் மசாலா படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.
எம்.ஜி.ஆர் மீது மக்களுக்கு என்ன இமேஜ் இருந்ததோ அதே பெயர் விஜயகாந்துக்கு கிடைத்தது. அதுதான் வாரிக்கொடுக்கும் வள்ளல். தன்னை சந்திக்க வரும் யாரும் பசியோடு திரும்பி போகக்கூடாது என நினைப்பார். எம்.ஜி.ஆரும் அப்படித்தான். அவரின் வீட்டில் 24 மணி நேரமும் சமையல் நடந்துகொண்டே இருக்கும். விஜயகாந்தும் அதையே செய்தர்.
சினிமாவில் விஜயகாந்த் வசனம் பேசும் ஸ்டைல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதற்கு அவரின் குரல் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. கேப்டன் பிரபாகரன், ஏழை ஜாதி என பல திரைப்படங்களிலும் அவர் பேசிய வசனங்கள் ரசிகர்களிடம் அவ்வவு பிரபலம். கடந்த 8 வருடங்களாக அவர் சினிமாவில் நடிப்பதில்லை.
அவரின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளிவந்த சகாப்தம் திரைப்படம்தான் அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம். இப்படம் 2015ம் வருடம் ஏப்ரல் மாதம் வெளிவந்தது. அதன்பின் சண்முக பாண்டியன் நடிப்பில் ‘தமிழன் என்று சொல்’ என்கிற படம் உருவானது. இதில், சில நாட்கள் விஜயகாந்த் நடித்தார். இதுதான் விஜயகாந்த் கடைசியாக சினிமா கேமரா முன்பு நின்றது.
அதன்பின் அவரின் உடல்நிலை காரணமாக இப்படம் டேக் ஆப் ஆகவில்லை. தற்போது விஜயகாந்த் மரணமடைந்துள்ள நிலையில் அவர் தமிழன் என்று சொல் படத்தில் அவர் நடித்த காட்சி வீடியோவை சிலர் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடைசியாக நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட “தமிழன் என்று சொல்” படப்பிடிப்பு தளம் pic.twitter.com/AN3kx3KAtQ
— Karthik Ravivarma (@Karthikravivarm) December 28, 2023