Vijayakanth – அந்த நடிகை எல்லாம் விஜயகாந்த்துக்கு கால் தூசிக்கு சமம் இல்லை.. கொந்தளிக்கும் மீசை ராஜேந்திரன்

சென்னை: நடிகரும் தேமுதி நிறுவனருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு செலிபிரிட்டிகள் முதல் சாமானியர்கள்வரை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வர முடியாதவர்கள் அவரது நினைவிடத்துக்கு சென்று தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர்.

விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட அவருக்கு டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. தங்களது வீட்டில் ஒருவர் இறந்துபோனால் என்ன சோகம் இருக்குமோ அதே சோகம்தான் பெரும்பாலானோரிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லடக்கம்: விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதனையடுத்து விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்த சூழலில் நடிகரும், விஜயகாந்த்துக்கு நெருக்கமாக இருந்தவருமான மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கொந்தளித்து பேசியிருக்கிறார்.

மீசை ராஜேந்திரன் பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “விஜயகாந்த் இறந்தபோது நேரில் வந்து அஞ்சலி செலுத்திய ரஜினி, கமல், விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் எல்லாம் நடிகர்கள் இல்லை. அவர் இறந்து ஒரு வாரம் கழித்து நினைவிடத்துக்கு வந்து நடிக்கிறார்கள் பாருங்கள் அவர்கள்தான் அருமையான நடிகர்கள். சிறப்பாக நடிக்கிறார்கள். சூர்யாவோ விஷாலோ நினைத்திருந்தால் ஒரு விமானத்தை பிடித்து அடுத்த நாளே வந்திருக்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *