விண்ணை முட்டும் அரோகரா கோஷம்.. திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து பால் அபிஷேகம்.!

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோயில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உற்சவர் முருகப் பெருமானுக்கு பக்தர்கள் முன்னிலையில் காவடி எடுத்து பால் அபிஷேகம் நடைபெற்றது.

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோயில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்க கவசம்,1008 தங்க வில்வ இலை மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை சேர்ந்த நகரத்தார் ஏற்பாட்டில் 308 பால்குடங்கள், 100 மயில் காவடிகள் அகவை பம்பை மேளங்கள் முழங்க மலைக் கோயிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து சாமிக்கு நிறுத்திக்கடன் செலுத்தினார்கள்.

பக்தர்கள் எடுத்து வந்த பால் பக்தர்கள் முன்னிலையில் உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் மலைக்கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் உற்சவர் முருகப்பெருமானுக்கு செய்யப்பட்டு சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவர் முருகப்பெருமானை பக்தியுடன் அரோகரா என்ற கோஷத்துடன் வழிபட்டு சென்றனர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *