ஐபிஎல் தொடரில் விராட் கோலி படைத்த மாபெரும் சாதனை.. பக்கத்தில் எந்த வீரரும் கிடையாது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2016 ஆம் ஆண்டு வரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா தான் முதலிடத்தில் இருந்தார். ஆனால் ரெய்னாவின் பார்ம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
இந்த நிலையில் அனைத்திலும் நம்பர் ஒன்னாக நான் தான் இருக்க வேண்டும் என்ற வெறியுடன் கடும் பயிற்சி செய்த விராட் கோலி 2016ஆம் ஆண்டு சீசன் இறுதியில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் விராட் கோலி மேலும் ஒரு சரித்திர சாதனையை ஐபிஎல் தொடரில் செய்திருக்கிறார். அதன் அருகில் தொட வேண்டுமென்றால் குறைந்தது ஆறு ஆண்டுகள் ஆவது ஆகும். கடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களை மேற்கோள் காட்டி விலகினார்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஆர் சி பி அணிக்காக விராட் கோலி களமிறங்குகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு விராட் கோலி கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதால் அவருடைய ரசிகர்கள் இந்த போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
முதல் போட்டியிலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடன் மோதல் என்பதால் நிச்சயம் இந்த ஆட்டம் பட்டையை கிளப்பும். இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றிலேயே ஆறு சீசன்களில் 500 ரன்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 557 ரன்கள் எடுத்த விராட் கோலி, 2013 ஆம் ஆண்டு 634 ரன்கள் குவித்தார்.
இதேபோன்று 2015 ஆம் ஆண்டு 55 ரன்கள் விளாசிய விராட் கோலி 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 973 ரன்கள் குவித்து ஒரு சீசனில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதே போன்று 2018 ஆம் ஆண்டு 530 ரன்களை தொட்ட விராட் கோலி, அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு தான் 639 ரன்களை சேர்த்தார். இடையில் ஐந்து ஆண்டுகளில் விராட் கோலி 500 ரன்களை தொடவில்லை. இதனால் தான் விராட் கோலி அருகே இந்த ரெக்கார்டை சமன் செய்ய வேண்டும் என்றால் ஒரு வீரருக்கு குறைந்தது ஆறு ஆண்டுகள் ஆவது ஆகும்.