தாய்லாந்து, சீனா இடையே விசா இல்லா அனுமதி ஒப்பந்தம்
பேங்காக்: தாய்லாந்துக்கும் சீனாவுக்கும் இடையே பரஸ்பர விசா இல்லா அனுமதிக்கு இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் பர்ன்ப்ரீ பஹித்த-நுகாரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இவ்விரு நாடுகளுக்கு இடையே பயணம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தப் பரஸ்பர விசா இல்லாத அனுமதி ஒப்பந்தம் வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என சீன அரசாங்க தொலைகாட்சி தெரிவித்தது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அதிகாரப்பூர்வ பயணமாக தாய்லாந்துக்குச் சென்றிருந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.