நியூயார்க்கில் இளம் பெண்ணுடன் விஷால்… வைரல் வீடியோ
நடிகர் விஷால் வெளிநாட்டில் ஒரு பெண்ணுடன் நடந்து செல்லும் வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், அந்த பெண் யார் என்பது குறித்த கேள்விகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்க் ஆண்டனி கொடுத்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் விஷால், அடுத்து ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஷால் வெளிநாட்டில் ஒரு பெண்ணுடன் நடந்து செல்லும் வீடியோ பதிவு எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ அவர் படத்தின் விளம்பரத்திற்காகவே அல்லது உண்மையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இண்டஸ்ட்ரி டிராக்கர் ரமேஷ் பாலா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில், நடிகர் விஷால், நியூயார்க்கில் யாரோ ஒருவருடன் நடந்து செல்கிறார்” என்று பதிவிட்டுள்ளார். வீடியோவில், விஷால் மெரூன் நிற ஹூடி மற்றும் ஜீன்ஸ் அணிந்திருப்பதைக் காணலாம், அதே நேரத்தில் அவரது தோழி அதே ஆடைகளை அணிந்துள்ளார்.
இருவரும் கிறிஸ்துமஸ் விளக்குகளை சுட்டிக்காட்டி தங்களுக்குள் பேசிக்கொண்டு செல்லும்போது, வீடியோ எடுக்கும் நபர் தனது நண்பரிடம், “அண்ணா, விஷால் தானா?” என்று கேட்கிறார். வீடியோவை பதிவு செய்யும் நபர், “அவருடன் ஒரு புதிய பெண்ணா?” என்று சேர்த்து அவரது பெயரைக் கூப்பிடுகிறார். குரலை கேட்டு திரும்பி பார்க்கும் விஷால், பீதியடைந்து, தனது ஹூடியை மாட்டிக்கொண்டு அந்தப் பெண்ணுடன் ஓடிவிடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Is that Actor @VishalKOfficial walking with someone in NYC 🤔 pic.twitter.com/ddMESEuKOq
— Ramesh Bala (@rameshlaus) December 26, 2023
நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் திருமணம் என்று கூறி வரும் நடிகர் விஷால், ஏற்கனவே, ஹைதராபாதை சேர்ந்த, அனிஷா அல்லா ரெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, ஒரு கட்டத்தில் திருமணம் நின்றுவிட்டது. அதன்பிறகு விஷால் ஒருவருடன் டேட்டிங் செய்கிறாரா என்று சிலர் ஆச்சரியப்பட்டாலும், இந்த வீடியோ ஒரு விளம்பர உத்தியின் ஒரு பகுதியாகும் என்று கூறி வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், “சிறந்த விளம்பர உத்தி. எந்த படம்?” என்றும், இது ப்ரோமோஷன் வேலை. மற்றும் ஸ்கிரிப்ட் செய்த வீடியோ தெளிவாக தெரிகிறது என்றும், மற்றொருவர் அந்த பெண்ணுடன் இரவு உணவு சாப்பிடுவதையும் அவர் பார்த்ததாகக் கூறியுள்ளார்.
விஷால் கடைசியாக இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். துப்பறிவாளன் படத்தின் 2-ம் பாகத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.