விசிக ‘ஜனநாயகம் வெல்லும்’ மாநாடு: 33 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஆளுநர் பதவி ஒழிப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தீர்மானங்களை முன்மொழிந்தார். சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அமைச்சரவையிலும், மேலவைகளிலும் எஸ் சி, எஸ் டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆணவ கொலைகளை தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *