பார்வைத் திறன் சோதனை: இந்த படத்தில் நாய் எங்கே இருக்கு? 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் விதவிதமான சுவாரசியத்தை அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்கு, பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என்றதுமே நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் நாய் எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. கூர்மையான பார்வைத் திறன் உடையவர்கள் மட்டுமே இந்த சவாலைக் குறிப்பிட்ட நேரத்தில் தீர்க்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் பார்ப்பதற்குத்தான் ஒரு தந்திரமாகத் தெரியும், ஒரு கண்கட்டி வித்தை என்று நினைக்கலாம், அது மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம் என்று நினைக்கலாம், ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால் அது ஒன்னுமே இல்லை. மிகவும் எளிதானப் புதிர்தான்.