அயோத்திக்குச் சென்றவர்கள் ஆதிசேது கோடியக்கரைக்கும் ராமேஸ்வரத்துக்கும் செல்ல வேண்டும்! ஏன் தெரியுமா?

ராமாயணம் என்பது ஸ்ரீராமரின் புகழ் பாடும் காவியம் மட்டுமல்ல, நேபாளம் தொடங்கி இலங்கை வரை மேற்கொள்ளப்பட்ட ஒரு புனித யாத்திரை காவியம் என்றும் போற்றப்படுகின்றது.
இன்றும் ராமாயணத்தை ஆழ்ந்து ஆராய்ந்து நோக்கினால் அக்கால இந்தியா, இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளின் வரலாற்றை ஓரளவு உணர்ந்து கொள்ள முடியும் என்பதே உண்மை. ஸ்ரீராமர் இந்திய தேசமெங்கும் சுற்றி வந்த வேளையில் அவர் வேதாரண்யம் கோடியக்கரைக்கும் வந்துள்ளார் என்று புராணங்கள் கூறுகின்றன.
நாகைலிருந்து கோடியக்கரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சரியாக 55 கி.மீ தொலைவில் உள்ளது ராமர் பாதம். இங்கிருந்து இலங்கை 25 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்தே ஸ்ரீராமர் முதன் முதலில் இலங்கையை பார்த்ததாக ராமாயணம் கூறுகிறது.
ஸ்ரீராமர் பாதம்ஸ்ரீராமர் இலங்கையை அடைய இவ்வழியைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தார். அதனால் இது ஆதிசேது எனப்படுகிறது. பின்பு இவ்வழியாக சென்றால் ராவணனின் அரண்மனையின் பின்பகுதியை தான் சென்றடைய முடியும் என்பதனால், உத்தமனான ஸ்ரீராமர் அது தவறென்று கருதி ராமேஸ்வரம் வழியாக இலங்கையைச் சென்றடைந்தார் என்கிறது வரலாறு.ல்உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமருக்கான கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் ராமாயணத்திற்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை புராணங்களும் கூறுகின்றன. தமிழகத்தின் பல்வேறு தொன்மையான நினைவிடங்கள் இதை நிரூபித்துக் கொண்டே வருகின்றன. அதில் குறிப்பாக ராமர் சீதாலட்சுமியைத் தேடி இலங்கைக்குப் பயணம் செல்லும் வழிகளில் ஸ்ரீராமர் தங்கி, வழிபட்டு மற்றும் இளைப்பாறிய இடங்கள் இந்தியா முழுவதும் மொத்தமாக 278 அமைந்துள்ளன. இவை ராமனின் நினைவைப் போற்றும் வகையில் இன்றும் இருக்கின்றன. குறிப்பாகத் தமிழகத்தின் கிழக்கு எல்லையாக அமைந்துள்ள நாகப்பட்டினத்தில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கோடியக்கரை இந்த வரலாற்றுப் பெருமையைத் தன்னகத்தே கொண்டுள்ளது.