Vitamin D Deficiency: இதன் விளைவுகள் என்ன? சைவ / அசைவ உணவுகள் மூலம் சரி செய்வது எப்படி?
மேலும் நமது ஆற்றல் அளவும் குறைகிறது. பல சமயங்களில் கடும் குளிரின் காரணமாக சூரிய ஒளி பூமிக்கு கிடைக்காமல் போகிறது. அப்போது நமது உடல் பலவீனமாக உணர ஆரம்பிக்கிறது. சூரிய ஒளியை தவிர வைட்டமின் டி பெற வேறு வழிகளும் உள்ளன. அந்த வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு
நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க பல உணவுகளை சாப்பிடுகிறோம். இல்லையெனில் பல வகையான குறைபாடுகள் ஏற்பட்டு, அதன் காரணமாக பல நோய்கள் ஏற்படலாம். இவை ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் ஆகும். இந்த பதிவில் நம் உடலுக்கு முக்கியமான சத்து ‘வைட்டமின் டி’ பற்றி காணலாம்.
வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படும் தீமைகள்
– வைட்டமின் டி குறைபாடு (Vitamin D Deficiency) நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பது மட்டுமின்றி, எலும்புகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
– இந்த வைட்டமின்னின் குறைபாட்டால், எலும்புகள் பலவீனமடைய ஆரம்பித்து, எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
– இதனால் சோம்பல், சோர்வு, எரிச்சல் போன்றவை ஏற்படும்.
சில முக்கிய விசேஷங்களில் கவனம் செலுத்தினால் வைட்டமின் டி குறைபாட்டால் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். வைட்டமின் டி பல உடல் செயல்பாடுகளைச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சி தக்கவைக்க வைட்டமின் டி உதவுகிறது.