VJ சித்து ரியா கண்ணன்.. போலி ப்ரொஃபைல்களை களையெடுக்கும் Bumble AI..!!

போலியான பெயர்களில் புரோஃபைல்களை உருவாக்கி மக்களை ஏமாற்றி வரும் போக்கு அதிகரித்து வருகிறது. அண்மை காலமாக பலர் இது போன்ற ஸ்கேம்களில் சிக்கி பணத்தை இழக்கும் செய்திகள் வருகின்றன.

போலியான பெயரில் சமூகவலைதளங்கள் அல்லது டேட்டிங் செயலிகளில் கணக்கினை உருவாக்குவது, வேறு ஒருவரின் படங்களை வைத்து , ரெக்வஸ்ட் கொடுத்து பின்னர் சாட்டிங் செய்து பணம் பரிப்பது என திட்டமிட்டு இதனை அரங்கேற்றுகின்றனர்.

தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் இதற்கு உதவி வருகிறது. இந்நிலையில் முள்ளை முள்ளால் எடுப்பது போல செயற்கை நுண்ணறிவை கொண்டே போலி கணக்குகளை முடக்கும் தொழில்நுட்பமும் வந்துவிட்டது.

பம்பிள் (Bumble) செயலி: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டேட்டிங் செயலி Bumble. டிண்டெருக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் இரண்டாவது டேட்டிங் செயலி இது.

சுமார் 150 நாடுகளில் இந்த செயலி பயன்பாட்டில் இருப்பதாகவும் , 55 மில்லியன் பயனாளர்களை கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செயலி தற்போது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி போலி கணக்குகளை வேட்டையாடி வருகிறது.

கேள்விக்குறியாகும் நம்பகத்தன்மை: பொதுவாகவே டேட்டிங் செயலிகள் மற்றும் சமூகவலைதளங்களில் போலி கணக்குகள் அதிகம் இயங்குவதால் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. எனவே பம்பிள் ( Bumble ), செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 95% போலி புரோஃபைல்களை முடக்கியுள்ளது. இதனால் பயனாளர்கள் போலி கணக்குகள் குறித்து அளிக்கும் புகார்கள் 45% குறைந்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

போலி கணக்குகளால் பயனாளர்கள் கவலை: போலியான புரோஃபைல்கள் மற்றும் ஸ்கேம்களில் சிக்கி கொள்வோம் தங்கள் செயலியை பயன்படுத்தும் 46% கவலை தெரிவித்ததாக பம்பிள் தெரிவித்துள்ளது. பெரும்பாலானவர்கள் அச்சம் தெரிவித்ததோடு , செயலி மீதான நம்பகத்தன்மையை குறைந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

குறிப்பாக தங்கள் பெயரை புகைபடத்தை பயன்படுத்தி சிலர் ஏமாற்றுகின்றனர் என்றும் கவலை தெரிவித்துள்ளனர் என

பம்பிள் தலைமை செயல் அதிகாரி லிடியேன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பெண் பயனாளிகள் இதனால் பல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர், இதற்கு செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் காரணமாகிவிட்டது, எனவே அதை கொண்டே தீர்வு காண வேண்டும் என முடிவு செய்தோம் என கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் போலி கணக்குகளை வேட்டையாடும் பணி திறம்பட நடைபெறுவதாகவும் , தங்கள் தளத்தை பாதுகாப்பான தளமாக மாற்றவே இந்த நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *