மீண்டும் ஃபோக்ஸ்வேகனின் போலோ இந்திய சந்தைக்கு வருகை..!

சமீபத்தில் நடைபெற்ற ஃபோக்ஸ்வேகன் வருடாந்திர கூட்டத்தில் இந்திய இயக்குநர் ஆசிஷ் குப்தா கூறுகையில் போலோ காரை விற்பனைக்கு கொண்டு வர மிகுந்த ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் போலோ காரை எந்த வகையில் கொண்டு வருவது மற்றும் எப்பொழுது வரும் போன்ற எந்தவொரு உறுதியான தகவலும் வெளியிடவில்லை. கடந்த ஆண்டு வரை போலோவை கொண்டு வர ஆர்வம் காட்டாத நிலையில் தற்பொழுது அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முறையாக வெளியிடப்பட்ட போலோ அதன் பிறகு 2016-ல் வெளியான பெர்ஃபாமென்ஸ் ரக போலோ ஜிடிஐ அமோக ஆதரவை பெற்றாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விற்பனை ஆகிய நிலையில் இந்திய சந்தையிலிருந்து நீக்கப்பட்டது.

ஆனால் போலோ வழக்கமான சந்தைக்கான மாடலாக வராமல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து போலோ GTI அல்லது கோல்ஃப் GTI ஆக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் விர்டஸ் மற்றும் டைகன் மூலம் சிறப்பான வகையில் சந்தை பங்களிப்பை கொண்டுள்ளதால், கூடுதலாக முதல் இவி மாடலாக VW ID.4 கிராஸ்ஓவரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ஸ்கோடா 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்த மாடலை ரீபேட்ஜ் செய்யும் தற்பொழுது இல்லை என ஃபோக்ஸ்வேகன் குறிப்பிட்டுள்ளது.

தற்பொழுது ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் டைகன் காரின் ஃபேஸலிஃப்ட் 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. எனவே, போலோவினை இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்பட வாய்ப்பில்லை, மாற்றாக CBU முறையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் போலோ GTI பிராண்டில் இறக்குமதி செய்து விற்பனைக்கு கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *