வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி : இன்று முதல் ஆரம்பம்..!
இந்தியாவில் முதல்முறையாக குறிப்பிட்டோருக்கு மட்டும், வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வசதியினை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது
“85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40 சதவீதம் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளை வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி, படிவம் 12 டி வழங்கப்பட உள்ளது.
இந்த நடவடிக்கை மார்ச் 20 (இன்று ) முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால், தகுதியானவர்கள் விரும்பும் பட்சத்தில் தபால் வாக்களிக்கலாம். ஒரு வேளை வாக்குச்சாவடிகளில் வந்து ஓட்டு போட வேண்டும் எனில் அவர்களுக்கு உதவுவதற்காக தன்னார்வலர்கள், சக்கர நாற்காலிகள் இருக்கும் படியான வசதி, போக்குவரத்து வசதிகள் செய்யப்படும்..
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது
தமிழ்நாட்டில் இதுவரை, 1,91,491 அரசு அலுவலகங்களின் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது.52,938 தனியார் கட்டிடங்கள் முன் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களும் அகற்றப்பட்டுள்ளது.20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வீடு வீடாக சென்று படிவம் 12 டி வழங்கப்படும்.அதில் அவர்கள் விரும்பும் பட்சத்தில் தபால் வாக்களிக்கலாம்.சிவிஜில் செயலி மூலம் மொத்தம் இதுவரை 282 புகார்கள் பெறப்பட்டுள்ளது.ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்கும் என கூறினார்.