செய்கூலி.. சேதாரம் இல்லை.. தங்கம் முதலீட்டுக்கு சூப்பர் வாய்ப்பு.. தொடங்கியது தங்க பத்திர விற்பனை.!

மத்திய அரசின் தங்க பத்திர முதலீட்டு திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான 4-ஆம் தவணை தங்க பத்திரம் விற்பனை 12.02.2024 முதல் திறக்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக கடந்த 2015-ஆம் ஆண்டில் தங்கப் பத்திரத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அரசின் சார்பில் ரிசர்வ் வங்கி தங்க பத்திரங்களை விற்பனை செய்கிறது. தங்கத்தில் முதலீடு செய்து நல்ல லாபம் பெற வேண்டும் என விரும்புபவர்களுக்கு மத்திய அரசின் தங்க பத்திரத் திட்டம் சிறந்த வாய்ப்பாகும்.

சீரான இடைவெளியில் அவ்வப்போது வெளியிடப்படும் இந்த தங்கப்பத்திர திட்டத்தின் வரிசையில், இந்த நிதியாண்டின் நான்காம் தவணை தங்க பத்திர விற்பனை நேற்று முதல் வரும் பிப்ரவரி 16 வரை 5 நாட்களுக்கு சப்ஸ்கிரிப்ஷனுக்காக திறக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் மற்றும் காத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த 5 நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு தனிநபர் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரையிலான மதிப்பிற்கான தங்கபத்திரம் வாங்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.6,263-ஆக ரிசர்வ் வங்கி (RBI) நிர்ணயித்துள்ளது. ஆன்லைன் மூலம் தங்க பத்திரம் (24 கேரட் தங்கம்) வாங்குவோருக்கு கிராமிற்கு ரூ.50 ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆன்லைன் வழியே இந்த தங்க பத்திரம் வாங்கினால் 1 கிராமிற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் விற்பனை விலையான ரூ.6,263 என்பதிலிருந்து ரூ.50 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.6,213-க்கு கொடுக்கப்படும்.

இந்த சப்ஸ்கிரிப்ஷன் பீரியட்டிற்கு முந்தைய வாரத்தின் கடைசி மூன்று வேலை நாட்களில் அதாவது பிப்ரவரி 07, 08 மற்றும் 09 ஆகிய தேதிகளில் 999 தூய்மையான தங்கம் விற்கப்பட்ட விலையின் சராசரியின் அடிப்படையில் பத்திரத்தின் பெயரளவு மதிப்பாக 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.6,263-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

என்ன பலன் ? :

மத்திய அரசு சார்பாக RBI-யே நேரடியாக தங்க பத்திரங்களை விற்பனை செய்வதால் இதில் முதலீடு செய்வோருக்கு எவ்வித பாதிப்பும், அபாயமும் இருக்காது. தவிர இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பத்திரங்கள் வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு உங்களுக்கு கிடைக் கூடியது செய்கூலி மற்றும் சேதாரமற்ற தூய தங்கமாகும்.

ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், குறிப்பிட்ட சில கமர்ஷியல் வங்கிகள் (சிறு நிதி வங்கிகள் மற்றும் பேமென்ட் வங்கிகள் தவிர), தபால் அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகளான BSE மற்றும் NSE உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தற்போது இந்த தங்க பத்திரங்கள் விற்கப்பட்டு வருகின்றன. வட்டித் தொகை முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் அரையாண்டு இடைவெளியில் டெபாசிட் செய்யப்படும், மேலும் இறுதி வட்டித் தொகை முதிர்ச்சியின் போது அசல் தொகையுடன் செலுத்தப்படும்.

இந்த தங்கபத்திர திட்டத்தின் முதலீடு காலம் 8 வருடம் ஆகும். 8 ஆண்டுகள் கழித்து அன்றயை தேதியின் 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வு தொகை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். தேவை என்றால் 5 ஆண்டுகள் நிறைவுற்ற பின் இந்த திட்டத்தில் இருந்து உங்கள் முதலீட்டை விலக்கி கொள்ளலாம். இந்திய குடியுரிமை பெற்ற தனிநபர்கள், HUF-க்கள், அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு இந்த தங்க பத்திரங்கள் விற்கப்படும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *