6 மாதங்களை எட்டிய டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் வெயிட்டிங் பீரியட்..!!!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இன்னோவா கிரிஸ்ட்டா உட்பட அதன் தயாரிப்புகளுக்கான காத்திருப்பு காலம் தொடர்பான தகவலை சமீபத்தில் வெளியிட்டது. இதில் டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் பிரபல தயாரிப்புகளில் ஒன்றான டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா இப்போது அதிகபட்சமாக 6 மாத காத்திருப்பு காலம் அதாவது வெயிட்டிங் பீரியட்டை கொண்டுள்ளது. இந்த காத்திருப்பு காலம் முன்பதிவு செய்யும் முதல் நாளில் இருந்து கணக்கில் வருகிறது மற்றும் பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாற்றத்திற்கு உட்பட்டது

இந்த பிரபல எம்பிவி-யை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள், மேலே குறிப்பிட்ட வெயிட்டிங் பீரியட்டிற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இது ஒரு சராசரி காத்திருப்பு காலம் மட்டுமே, மக்கள் வாங்க விரும்பும் வேரியன்ட் மற்றும் அது கிடைக்கும் தன்மையை பொறுத்து இந்த காத்திருப்பு காலமானது மேலும் நீளலாம். MPV பிரிவில் கிரிஸ்ட்டாவிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து தேவை அதிகரித்து உள்ள நிலையில், இதற்கான காத்திருப்பு நேரமும் அதிகரித்து காணப்டுகிறது.

விலை விவரங்கள் மற்றும் டிரிம்ஸ்..

இந்த வாகனத்தின் பேஸ் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19.99 லட்சமாக உள்ளன நிலையில், இதன் டாப்-என்ட் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.26.30 லட்சம் வரை செல்கிறது. GX, VX மற்றும் ZX ஆகிய மூன்று வேரியன்ட்ஸ்களில் கிடைக்கிறது. மாடலை பொறுத்து 7 முதல் 8 பேர் வரை அமர கூடிய வசதி கொண்டது. சூப்பர் ஒயிட், ஒயிட் பேர்ல் கிரிஸ்டல் ஷைன், ஆட்டிட்யூட் பிளாக் மற்றும் அவன்ட்-கார்ட் ப்ரோன்ஸ் உள்ளிட்ட பல கலர் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்கள்:

தற்போதைய டொயோட்டா கிரிஸ்டா 2.4-லிட்டர், 4-சிலிண்டர், டர்போடீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் யூனிட் அதிகபட்சமாக 148bhp பவர் மற்றும் 343Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது. ட்ரான்ஸ்மிஷனுக்காக இந்த யூனிட் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனைப் பயன்படுத்துகிறது. 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இந்த புதிய பதிப்பில் வழங்கப்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முக்கிய அம்சங்கள்:

சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட Crysta சில சிறந்த அம்சங்களைக் கொண்டு தனது போட்டியாக இருக்கும் மாடல்களை விட தனித்து தெரிகிறது. இந்த பட்டியலில் jack-knife கீயுடன் கூடிய வயர்லெஸ் டோர் லாக், மல்டி-ஃபங்க்ஷனல் ஸ்டீயரிங் வீல், மேனுவல் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம், ஹை குவாலிட்டி பிளாக் ஃபேப்ரிக் சீட் கவரிங்ஸ் மற்றும் ஆல் வயர்லெஸ் கார் கார் டெக்னலாஜியை சப்போர்ட் செய்யும் மேம்படுத்தப்பட்ட டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை அடங்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்:

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்த வரை இந்த காரில் காரில் மல்டிபிள் ஏர்பேக்ஸ், சீட் பெல்ட் ரிமைண்டர், டைனமிக் கைட்லைன்ஸ்களுடன் பார்க்கிங் சென்சார், EBD உடன் ஏபிஎஸ், ஸ்பீட் அலர்ட், வெஹிகிள் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் என பட்டியல் நீள்கிறது. மறுபுறம் இந்த வாகனத்தின் GX வெர்ஷனானது, டிரைவர் டேட்டாக்களுடன் கூடிய டாட்-ஸ்டைல் MID, டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள் போன்ற பல கூடுதல் வசதிகளுடன் வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *