கம்மி பட்ஜெட்ல சீறி பாயுற பைக் வேணுமா? இதோ வந்துவிட்டது பல்சர் என்150 மற்றும் என்160 பைக்குகள்!
பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் என்150 மற்றும் பல்சர் என்160 ஆகிய இரண்டு பைக்குகளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுவெளியில் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் தற்போது இந்த பைக்குகளுக்கான விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த இரண்டு பைக்களின் விலை குறித்த விரிவான விபரங்களை எல்லாம் காணலாம் வாருங்கள்.
பஜாஜ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது பல்சர் என் 150 மற்றும் என்160 ஆகிய இரண்டு பைக்குகளையும் பொதுவெளியில் முதன்முறையாக காட்சிப்படுத்தி இருந்தது. அப்பொழுது இந்த பைக்கின் விலை குறித்த விபரங்களை எல்லாம் அந்நிறுவனம் வெளியிடவில்லை. இந்நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அந்த பைக்கின் விலை குறித்து அனைத்து விபரங்களையும் வெளியிட்டுள்ளது.
இந்த பல்சர் என்150 மற்றும் என்160 ஆகிய இரண்டு பைக்குகள் இரண்டு விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் பல்சர் என்150 பைக் ரூபாய் 1.18 லட்சம் முதல் ரூ1.24 லட்சம் என்ற விலையிலும் பல்சர் என்160 பைக் ரூபாய் 1.31 லட்சம் முதல் ரூபாய் 1.33 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு முன்பும் எதிர்பார்க்கப்பட்ட விலை இதுதான்.
இதில் பல்சர் என்150 மற்றும் என்160 ஆகிய இரண்டு பைக்குகளிலும் பேஸ் வேரியன்ட் என்பது முந்திய பைக்குகளில் உள்ள அதே டிஜிட்டல் அனலாக் டிஸ்ப்ளே கொண்ட பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2023-ம் ஆண்டு விற்பனையில் இருந்த அதே பைக் தான் தற்போது சிறிய சிறிய மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முறையே ரூபாய்1.18 லட்சம் மற்றும் ரூ1.31 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
பல்சர் என் 150 பைக்கில் புதிய எல்இடி டேஷ் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் நீங்கள் போன் காலை ஏற்கவும் கட் செய்யவும் முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோக முக்கிய மாற்றமாக இந்த பைக்கில் பின்பக்கம் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் தான் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக பஜாஜ் பல்சர் 150 பைக்கை பொறுத்தவரை தற்போது டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த செக்மெண்டில் உள்ள பைக்குகளிலேயே டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட பைக் இதுவாக தான் இருக்கும். இந்த பைக்கிலும் டிஜிட்டல் டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. இதே டேஷ்போர்டு தான் என் 150 பைக்கின் டாப் வேரியன்டில் உள்ளது.
இந்த பைக்கின் விலையை பொறுத்த வரை தற்போது ரூ1.33 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. பெரிய அளவில் இந்த பைக்கில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும் மிக முக்கியமான இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது மார்க்கெட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் இந்த அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
பல்சர் பைக் என்பது இன்று இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள பைக்காகவும், நீண்ட ஆண்டுகளாக இந்த பைக் சிறப்பான விற்பனையில் இருந்து வருகிறது. இன்றைய இளைஞர்கள் சிறுவர்களாக இருக்கும்போது இந்த பைக்கை வாங்க வேண்டும் என்ற கனவில் இருந்திருப்பார்கள். அவர்கள் தற்போது வளர்ந்து இந்த பைக்கை வாங்கும் தனது கனவை நினைவாக்கி வருகின்றனர்.
இதனால் இன்றளவும் பல்சர் பைக் சிறப்பான விற்பனையில் இருக்கிறது. தொடர்ந்து இதை அப்டேட் செய்து அதன் விற்பனையை தக்க வைக்க பஜாஜ் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதில் இந்த முயற்சியும் ஒரு முக்கிய முயற்சியாக நாம் பார்க்கலாம். இது வந்து இன்னும் அடுத்தடுத்த அப்டேட்களை பல்சர் பைக் பெறும் எனவும் எதிர்பார்க்கலாம்.