கண்ணாடிபோல் சருமம் ஒளிர வேண்டுமா? அப்போ இதை பண்ணி பாருங்க
நாம் எல்லோரும் நமது அழகை பராமரிக்க நிறைய அழகுக்குறிப்புக்களை பின்பற்றுவோம்.
அவை ரசாயனமாக இருக்க கூடாது. நமது சருமத்திற்கு உள்ளே பிரச்சனையை தராமல் இருப்பதை சிலர் விரும்புவார்கள். அந்த வகையில் வீட்டில் பல இயற்கை பொருட்களை வைத்து நாம் நமது அழகை மெருகூட்டலாம்.
அந்த வகையில் மேக்கப் பயன்படுத்தாமல் உடலை மற்றும் சருமத்தை எப்படி அழகாக வைத்திருப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அழகுக்குறிப்புகள்
சருமத்திற்கு வைட்டமின் சி நிறைந்துள்ள எலுமிச்சை பழத்தை தினமும் பயன்படுத்த வேண்டும்.
எலுமிச்சை சாறை தினமும் கொஞ்சம் முகத்தில் பூசி வந்தால் முகம் பளீச் என்று இருக்கும்.பாலில் இருக்கக் கூடிய எச்சங்கள் முகத்தில் சேர்ந்தால் அது முகத்திற்கு பிரகாசத்தை கொடுக்கும்.
பச்சைப் பாலுடன் மஞ்சள், எலுமிச்சை, முல்தானி மெட்டி போன்றவற்றைச் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யலாம்.
இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் முகத்தில் ஒளிரும் அழகை கொடுக்கும். தக்காளியில் உள்ள லைகோபீன் பண்புகள், உடனடியாக சருமத்தின் நிறத்தைப் பெற உதவுகிறது.
தக்காளி முகத்தில் பேஸ் பேக்காக நீங்கள் தடவும் போது, சருமத்தில் இறந்த செல்களை அகற்றுகிறது.
பப்பாளி பழத்தில் இருக்கும் பப்பெய்யன் என்ற பழம் மற்றும் வைட்டமின் சி சருமத்தை எப்போதும் மென்மையாக வைத்திருக்க உதவும்.