கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க

முகம் மற்றும் உடல் பராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவு கூந்தல் தொடர்பிலும் அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பது முக்கியம்.ஏனெனில் முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி சுற்றுச்சூழல் மாசு மற்றும் இரசாயனம் கலந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்பதுத்தல் போன்ற காரணங்களினால் பல்வேறுப்பட்ட கூந்தல் பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்வது அவசியம்.

முடியுதிர்வை அதிகப்படுத்தும் காரணிகள்
முடிக்கு வண்ணம் தீட்டுதல், முடியை நேராக்குதல், முடியை உலர வைப்பதற்கு ஹேர் டிரையர் பயன்படுத்துதல், நெருக்கமான பற்களை கொண்ட சீப்புகளை பயன்படுத்துதல் போன்றன முடி உதிர்வை அதிகப்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன.

இத்தகைய பழக்கவழக்கங்களுடன் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், மிகவும் குறைவான கலோரிகளை கொண்ட உணவு பொருட்களை உட்கொள்ளுதல், போன்ற காரணங்களாலும் முடி உதிர்வது அதிகமாகின்றது.

முடி உதிர்வை கட்டுப்படுத்தி நீண்ட ஆரோக்கியமான கூந்தலை பெற வேண்டுமாயின் நமது அன்றாட உணவில் அதிகளவில் புரதம் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.தினசரி குறைந்த பட்சம் ஒரு முட்டையாவது சாப்பிடுவது முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகின்றது.

ஒரு டீஸ்பூன் அப்பிள் சிடேர் வினிகர், இரண்டு டேபிள் ஸ்பூன் ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் மூன்று முட்டைகளின் வெள்ளைக்கரு கலந்து தலைமுடியில் பூசி 30 நிமிடங்கள் ஊற விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கூந்தல் உதிர்வது குறைவதுடன் கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

தலையில் எண்ணெய் பூசுவது போன்று தண்ணீரை லேசாக தடவி பின்பு முட்டை கலவையை கூந்தலில் தடவிவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து குளித்துவிடலாம்.

முட்டையில் இருக்கும் புரதம் தலைமுடியை கடினமாக்குவதுடன் கூந்தல் நீளமாக வளரவும் உதவும். நன்கு பழுத்த அவகாடோ பழத்துடன் முட்டையின் வெள்ளைக்கருவை மற்றும் வைட்டமின் -ஈ கலந்து

ஈரமான தலைமுடியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கூந்தல் உதிர்வு கணிசமாக குறையும்.

அவகாடோ பழத்தில் வைட்மின்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றது.

அவை தலைமுடிக்கு பொலிவு சேர்க்கக் கூடியவை. முடி உதிர்வு பிரச்சினையை எதிர் கொள்பவர்கள் இந்த கலவையை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் போதும் விரைவில் கூந்தல் உதிர்வு முற்றாக நின்றுவிடும்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *