உங்க வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் பெற வேண்டுமா? இந்த லிங்க்-ல் விண்ணப்பம் செய்தால் போதும்..!
வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் ‘பிரதமரின் சூரிய வீடு என்ற பெயரில் இலவச மின்சார திட்டத்தை ரூ.75,000 கோடி முதலீட்டில் தொடங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அறிவித்தார். இத்திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் வீடுகளின் கூரையில், மானிய விலையில் சோலார் பேனல் பொருத்தப்பட உள்ளது. அவ்வாறு பொருத்தப்படும் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி குடியிருப்பு வீடுகளுக்கு 1 முதல் 2 கிலோவாட் திறன் உள்ள சோலார் பேனல் அமைக்க ரூ.30,000 மானியம் வழங்கப்படும். அதேபோல் கூடுதலாக கிலோவாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதமும், 3 கிலோவாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் வழங்கப்பட உள்ளது. 3 கிலோ வாட் திறனுக்கு அதிகமான அளவில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு உச்சவரம்பாக ரூ.78,000 மானியம் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள், சொந்தமாக வீடு மற்றும் ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் https://pmsuryaghar.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.இந்த பதிவினை பார்த்து அரசு ஒப்புதல் அளித்த உடன், உங்கள் வீடுகளில் சூரியமின்சக்தி தகடு பொருத்தப்படும். இந்த திட்ட பணிகள் முடிந்த உடன் 7 முதல் 15 நாட்களில் மானியம் தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
முக்கியமாக நம்ம கவனிக்க வேண்டியது மானியம்னு நீங்க ஒரு கம்பெனிய கேக்கும் போது அவர்கள் 3kw க்கு உண்டான செட்டப் (பொக்கே) க்கு ஆன ரேட் கொடுப்பாங்க. உதாரணமாக 1.30 லட்சம் என்று வைங்க.. அதுல பேனல் மாட்டும் ஸ்டச்சர் ஸ்டேன்டேடு, டிசி கேபிள், ஏசி கேபிள்னு ஒரு ஸ்டேண்டேடு அளவு தான் இருக்கும்.. இதுல உங்க ஏரியா மின்வாரிய அலுவகத்தில் விண்ணப்பித்தால், அவர்கள் உங்கள் வீட்டுக்கு 3kw சோலார் பேனல் மாட்டலாம்னு சொன்ன பின்பு EBயோட ரூல்ஸ்க்காக அந்த கம்பெனி இன்ஸ்ட்டால் செஞ்ச பின்னாடி EB சைடு இன்ஸ்பெக்சன் முடிச்சுட்டு பைரக்சன் மீட்டர்க்கு பணம் கட்ட சொல்லிட்டு, உங்களோட ஆதார் மற்றும் பேங்க் அக்கவுண்ட் நபம்பர் மற்றும் மானியத்தை போர்ட்ல அப்டேட் செஞ்சுடுவாங்க.
அதற்கு பின்பு உங்க அக்கவுண்ட்க்கு மத்திய அரசு தரும் 78000 மானியம் வரும்..உங்களுக்கு சோலார் பேனல் மாட்டி கொடுக்கும் கம்பெனிக்கும் உங்களுக்கு வரவேண்டிய மானியத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை . நேரடியாக மத்திய அரசு கொடுக்கும் மானியம் உங்களை வந்து அடையும், உங்கள் வீட்டில் மாட்டும் சோலார் பிளாண்ட்க்கு நீங்களே முழு தொகையும் கொடுத்த செட்டில் செய்து கொள்கிறீர்கள்.. இதில் கவனிக்க வேண்டியது