ஒரே வாரத்தில் கருவளையம் நீங்க வேண்டுமா? இயற்கை வீட்டு வைத்தியம் இதோ

பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.

ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான்.

முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க உதவும் சில இயற்க்கை வீட்டு வைத்தியங்கள் குறித்து விரிவாக காணலாம்.

உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப்
உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப் மசாஜை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால் கருவளைய பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க உதவுகிறது.

உருளைக்கிழங்கில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் சருமத்தை எப்பொழுதும் பளபளப்புடன் வைத்திருக்க உதவுவதோடு.

இதனை செய்வதற்கு முதலில், உருளைக்கிழங்கை தோல் சீவி துருவி தண்ணீர் ஊற்றி நன்கு கலந்துக் கொள்ளவும்.

இதையடுத்து ஐஸ் க்யூப் தயாரிக்கும் டப்பாவில் சிறிது சிறிதாக ஊற்றி பிரிட்ஜிக்குள் வைத்து ஐஸ் க்யூப் ஆக மாறியதும் எடுத்து பயன்படுத்தலாம்.

வெள்ளரிக்காய் சாறு
சருமத்திற்கு வெள்ளரிக்காய் பெரிதளவில் உதவுகிறது.

இதில் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் சருமத்தை வறண்டு விடாமல் தடுப்பதோடு கருவளைய பிரச்சனையையும் தீர்க்க உதவுகிறது.

முதலில் வெள்ளரிக்காயை தோல் சீவி துருவி சல்லடைப் பயன்படுத்தி வெள்ளரி சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

இந்த சாறுடன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்துக்கொண்டு தினமும் இரவு கருவளையம் உள்ள இடங்களில் நன்கு அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.

தேன் மற்றும் காபி தூள்
ஒரு கிண்ணத்தில் தேன் மற்றும் காபி தூள் இரண்டையும் சேர்ந்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

பின்னர் இந்த கலவையை முகம் மற்றும் கருவளையம் உளள பகுதிகளில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.

15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்தால் போதும் முகம் பிரகாசமாக இருக்கும்.

குறிப்பாக, ஒரு நாளைக்கு 7 – 8 மணி நேரமாவது நன்றாக தூங்க வேண்டும். மேலும், ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *