சிவனின் அருளை பெற வேண்டுமா? மறந்தும் இந்த பொருட்களை காணிக்கையாக படைத்து விடாதீர்கள்
சிவ பூஜை மற்றும் சிவ அபிஷேகங்கள் எந்த முறையில், எந்த நேரத்தில், எந்தெந்த பொருட்களை கொண்டு, எத்தனை நிமிடங்கள் செய்யப்பட வேண்டும் என சிவ புராணம் தெளிவாக விளக்குகிறது. சிவ பெருமானை எந்த பொருளால் பூஜை செய்தாலும், எந்த பொருளால் அபிஷேகம் செய்தாலும் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்தும் சிவ புராணம் விளக்கி உள்ளது. இந்த முறையில் சிவனை வழிபட்டாலே அவருடைய பரிபூரணமான அருளை பெற்று விட முடியும்.
சிவ பூஜை செய்யும் முறை :
சிவலிங்கம் என்பது சிவ பெருமானின் அருவுருவ வடிவமாகும். இதனால் சிவலிங்கத்தை வழிபடுவதற்கு உரிய முறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். சரியான முறையில் சிவ வழிபாட்டிவை மேற்கொண்டால் பக்தர்களின் விருப்பங்கள் அல்லது வேண்டுதல்கள் அனைத்தையும் சிவ பெருமான் நிறைவேற்றி வைப்பார். அதே சமயம் சிவ லிங்கத்திற்கு படைக்க கூடாத பொருட்கள் என சில உள்ளதாகவும், இந்த பொருட்களை மறந்தும் கூட பக்தர்கள் சிவலிங்கத்திற்கு படைத்து விடக் கூடாது. அப்படி படைத்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவதுடன், எதிர்மறையான விளையாவுகளை சந்திக்க நேரிடும் என சிவ புராணம் சொல்கிறது.
சிவனுக்கு படைக்கக் கூடாத பொருட்கள் :
துளசி :
இந்து புராணங்களின் படி, கடவுள்களாலும் வெல்ல முடியாத மாபெரும் சக்தியாக திகழ்ந்தான் ஜலந்தர். இதற்கு காரணம் அவரது மனைவியான துளசியின் பதிபக்தியின். இதனால் துளசியின் தூய்மைக்கு கலங்கம் ஏற்படுத்துவதற்காக ஜலந்தரின் உருவத்தில் மகாவிஷ்ணு செல்ல, சிவனும் ஜலந்தரை எரிந்து சாம்பலாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த துளசி, விஷ்ணுவை சாளகிராம கல்லாகவும், சிவனை புனித இலைகளை கொண்டு பூஜிக்கப்படாமல் போகும் படியும் சாபம் அளித்தாள். துளசி அளித்த சாபம் காரணமாகவே சிவ பெருமானுக்கு துளசி படைக்கப்படுவதில்லை. இதனால் சிவனுக்கு துளசி இலையை படைத்தால் அது நமக்கு தீமைகளையே ஏற்படுத்தும்.