முடி அடர்த்தியாக வளரவேண்டுமா? இந்த எண்ணெயை பயன்படுத்தி பாருங்கள்
தொடர்ந்து 3 முதல் 6 மாதங்களுக்கு ரோஸ்மேரி எண்ணெயை பயன்படுத்தி வந்தால் மினாக்ஸிடிலில் கிடைக்கும் பயன்கள் அனைத்தும் இதிலும் கிடைக்கும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. வெந்தயம் தலைமுடி வளர்ச்சியை தூண்டி, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் வெந்தயத்தில் உள்ள புரதம் முடி உதிர்வை குறைத்து புதிய தலைமுடி வளர உதவுகிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் லீமா மகாஜன்.
இந்த எண்ணெயை எப்படி தயார் செய்வது?
இதற்கு தேவையான பொருட்கள்:
கடுகு எண்ணெய்
கறிவேப்பிலை
ரோஸ்மேரி இலை
வெந்தயம்
பாதாம் எண்ணெய்
விளக்கெண்ணெய்
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் கடுகு எண்ணெயை சூடுபடுத்தவும். அதோடு ரோஸ்மேரி, கறிவேப்பிலை, வெந்தயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும். பின்னர் அடுப்பை அனைத்து எண்ணெய் குளிரானதும் பாட்டிலில் ஊற்றி வையுங்கள். இதில் பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் சமமான அளவில் சேர்க்கவும்.
இந்த எண்ணெய் பயன் தருமா?
கடுகு எண்ணெயில் அதிகளவு ஆல்பா ஃபேட்டி ஆசிட் உள்ளது. முடியில் ஈரப்பதத்தை தக்கவைக்கவும், முடியின் வேர் முதல் நுனி வரை நல்ல ஊட்டம் கிடைக்கவும் இந்த ஆசிட் உதவுகிறது.
தலைமுடியை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது வெந்தயம். இதிலுள்ள புரதம் மற்றும் வைட்டமின் பி3 முடி உதர்வை தடுத்து பொடுகு தொல்லையை போக்குகிறது.
ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகமுள்ள கறிவேப்பிலை, முடியின் வேரை பலப்படுத்தவும் முடி உதிர்வை தடுக்கவும் உதவுகிறது. இதிலுள்ள பீட்டா கரோடின் உச்சந்தலையை புத்துணர்ச்சி அடைய வைக்கிறது.
விளக்கெண்ணெயில் ரிசினோலெசிக் ஆசிட் உள்ளது. இதிலுள்ள நுண்ணியிர் எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலைக்கு நன்மை செய்கிறது. தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது விளக்கெண்ணெய்.
தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதற்கு பல வழிகளில் உதவி செய்கிறது பாதாம் ஆயில். வைட்டமின் ஏ, டி மற்றும் இ போன்ற கொழுப்பு கரையும் வைட்டமின்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தையும் பளபளப்பையும் தருகிறது. மேலும் இதில் மாக்னீசியம், கால்சியம், ஓமேகா 6 மற்றும் ஓமேகா 9 ஃபேட்டி ஆசிட் உள்ளது.
இத்தகைய இயற்கை எண்ணெய்கள் பொதுவான தலைமுடி பிரச்னைகளை சரி செய்வதோடு வறட்சியை போக்கி, வழுக்கையை கட்டுப்படுத்தி, முடியின் அடர்த்தி குறையாமல் பார்த்துக் கொள்வதோடு நரை முடி வராமலும் பார்த்துக் கொள்கிறது. எனினும் உங்களுக்கு குறிப்பிட்ட தலைமுடி சார்ந்த பிரச்னைகள் இருந்தால், மருத்துவரை சென்று நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஏனென்றால் இந்த எண்ணெயில் பயன்படுத்தப்படிருக்கும் சில பொருட்கள், ஒருசிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.