கடவுள்கள் பேசிக்கொள்வதை கேக்கணுமா? அப்போ இந்தக் கோயிலுக்குப் போங்க!
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’ என்று சொல்வது போல, கடவுளை கல்லாகப் பார்த்தால் அது கல்லாகத் தெரியும்.
உயிருள்ளதாய் பார்த்தால், கல்லுக்கும் உயிர் வரும்.
அதுபோலதான் ராஜ ராஜேஸ்வரி திரிபுரசுந்தரி கோயிலில் நடக்கும் அதிசயமும் உள்ளது. பீஹார் மாநிலம், பஸ்தர் என்னும் இடத்திலுள்ள ராஜ ராஜேஸ்வரி திரிபுர சுந்தரி கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் ஆண்டுதோறும் திரண்டு வருகிறது.
துர்கா தேவி அருள்புரியும் இக்கோயில் சுமார் 400 வருடங்கள் பழைமையானதாகும். இதை நிறுவியவர் தந்திரிக் பவானி மிஸ்ரா. துர்கா தேவி கெட்டதை அழித்து நன்மையை நிலைநாட்டக் கூடியவராவார். இந்தியா முழுவதும் நிறைய துர்கை கோயில்கள் இருந்தாலும், கும்பகோணம் அருகிலிருக்கும் பட்டீஸ்வரம் மற்றும் கதிராமங்கலம் துர்கை கோயில்களே மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இக்கோயிலில் துர்கா தேவியின் வெவ்வேறு அவதாரங்கள் கொண்ட சிலைகள் உள்ளன. திரிபுரா, துமாவதி, தாரா, காளி, கமலா, புவனேஸ்வரி போன்ற பல அவதாரத்தில் துர்கா தேவி காட்சி தருகிறார்.
இங்கு இருக்கும் முக்கியமான கடவுள், ராஜ ராஜேஸ்வரி திரிபுர சுந்தரியாகும். இக்கோயில் தச மஹாவித்யாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் உள்ள பைரவரை அன்னபூரண பைரவர், கால பைரவர், மாதங்கி பைரவர் என்று பல பெயர்களில் வழிபடுகிறார்கள்.
இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை என்னவென்றால், இக்கோயிலில் உள்ள தெய்வ சிலைகள் இரவானால் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளுமாம். அதை நம்மால் கேட்க முடியும் என்றும் கூறுகிறார்கள். அதனால் விஞ்ஞானிகளின் குழு இவர்கள் சொல்வது உண்மையா என்று ஆராய்வதற்காக ஒரு நாள் இரவு முழுவதும் கோயிலில் தங்கி ஆராய்ந்துள்ளனர்.