ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? – அப்போ இதையெல்லாம் சாப்பிடுங்க.!

சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள புரோட்டீன் அளவு தான் ஹீமோகுளோபின். இது உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் ஆக்சிஜனை செலுத்தி அவற்றிலிருந்து கார்பன் – டை- ஆக்சைடை உறிஞ்சி நுரையீரலுக்கு கடத்துகிறது.
இந்த ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது என்றால் ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
இந்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். அப்படி, இரும்பு சத்து நிறைந்த சில உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தாலே போதுமானது. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம்.
சாதாரணமாக, ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 கிராம் வரையிலும், பெண்களுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரை இருக்க வேண்டும். இந்த ரத்தத்தின் அளவு உடலில் இரும்புச்சத்து குறைவதால் தான் குறைகிறது. அதனால், காய்கறிகள், முட்டைகள், தானியங்கள், பருப்பு வகைகள், அசைவ உணவுகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உடலில் ரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதற்கு போலிக் அமிலம் அதாவது பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின் உதவும். இந்த அமிலம் குறைவாக இருந்தால் ஹீமோகுளோபின் அளவும் குறையும். அதனால் பச்சை காய்கறிகள், வேர்க்கடலை, வாழைப்பழம், பிரக்கோலி, ஈரல் உள்ளிட்டவற்றை சாப்பிட வேண்டும்.
மேலும், மாதுளையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இவை ஹீமோகுளோபினை அதிகரிக்க மிகச்சிறந்த ஒன்றாகும். அதனால் தினமும் ஒரு மாதுளை சாப்பிட வேண்டும்.
உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்து இரும்புச்சத்தை அளிக்கிறது பேரிச்சம்பழம். அதனால், ஒரு நாளைக்கு தினமும் 3 பேரிச்சை பழமாவது சாப்பிட வேண்டும்.