உடலில் வைட்டமின் பி அதிகரிக்க வேண்டுமா? அப்போ ஸ்மூத்தி சாப்பிடுங்க
வைட்டமின் பி சத்து என்பது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்தாகும். இந்த வைட்டமின் பி சத்து உடலில் குறையும் போது எமக்கு பல பிரச்சனைகள் வரும்.
கடுமையான முடி உதிர்வு, உடல் சோர்வு, நரம்பு இழுப்பது, எப்போதும் உறக்கம், கண் பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகள் இருந்தால் உங்கள் உடலில் வைட்டமின் பி குறைபாடு இருக்கின்றது என்பது தான் அர்த்தம்.
இந்த வைட்டமின் பியை எப்படி உடலில் அதிகரிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்மூத்தி
இந்த ஸ்மூர்த்தியை நீங்கள் எப்போதும் சாப்பிடலாம். சிறியவர்கள் முதல் பெரியவர் வரை யாராக இருந்தாலும் இதை சாப்பிடலாம். இதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்குமே தவிர பக்கவிளைவுகள் எதுவும் வராது.
இதனை நீங்கள் இரண்டு வாரங்கள் சாப்பிட்டாலே போதும்.
தேவையான பொருட்கள்
பாதாம் – 6
முந்திரி – 8
அத்திப்பழம் – 1
பரங்கி விதை – ஒரு ஸ்பூன்
சியா விதை – ஒரு ஸ்பூன்
உலர்ந்த திராட்சை – 15
சூரிய காந்தி விதை – ஒரு ஸ்பூன்
பேரிட்சை பழம் – 2
வாழைப்பழம் – 1
பால் – 1 டம்ளர்
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அனைத்து நட்ஸ்களையும் ஒரு இரவு ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் இது எல்லாவற்றையும் ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் 2 பேரிச்சம்பழங்களையும் சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் வாழைப்பழம் அல்லது காய்ச்சி ஆறிய பால் சேர்க்கலாம்.
இப்படி செய்து எடுத்து நீங்கள் இதை உங்கள் காலை உணவிற்கு பின்னர் அல்லது முன்னர் எடுத்து கொள்ளலாம். இதனால் உடலில் வைட்டமின் பி சத்து அதிகமாகும்.