40 வயதிலும் முகம் பளபளப்பாகவே இருக்கணுமா? உடனே இதை செய்யுங்கள்

20 வயதில் உங்கள் முகம் சுருக்கம் அடையத் தொடங்கினால் நீங்கள் உணவுப் பழக்கத்தில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில் உங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதபோதுதான் இது போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கிவிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலம் சருமம் ஆரோக்கியம் மேம்படும். அதிலும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மசாலாவின் நீர் சாருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

சரும பராமரிப்புக்கான சிறந்த உணவு – Best diet for skin care

* பாதாம் (Almonds) பருப்பில் மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. வைட்டமின் ஈ நிறைந்த இந்த உலர் பழம் முக சுருக்கங்களை குறைக்க உதவும். இதனை ஊறவைத்து சாப்பிட்டால், இன்னுமும் கூடுதல் பலனைத் தரும்.

* அதே நேரத்தில், ஆளி விதைகளை (flax seeds Benefits) உட்கொள்வது சருமத்திற்கு நன்மை தரும். இதனை நன்றாக வறுத்து உங்களின் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது சருமத்தை (Skin CarTips) பொலிவாக்க உதவுவாதுடன் உடல் எடையையும் குறைக்க உதவும்.

ஆளிவிதையில் நிறைந்திருக்கும் சத்துக்கள்:
100 கிராம் ஆளி விதையில், புரதம் – சுமார் 18 கிராம், கார்போஹைட்ரேட் – 28 கிராம், கொழுப்பு – 42 கிராம், நார்ச்சத்து – 27 கிராம், கால்சியம் – 255 மி.கி, இரும்பு – 4.5 மி.கி, மெக்னீசியம் – 392 மி.கி. தவிர இதிலிருந்து, வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, பி9, வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளது.

தண்ணீரில் ஊறவைத்த திராட்சையையும் (Raisins) சாப்பிடலாம். இதுவும் உங்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது கண்பார்வையை மேம்படுத்த உதவும். இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.

அதேபோல் முந்திரி (Cashew), திராட்சை, பிஸ்தா, பாதாம் போன்ற உலர் பழங்கள், செலினியத்தின் சிறந்த மூலமாக உள்ளது. இவை, சருமத்தை பாதிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பதோடு, சரும தடிப்புகள் மற்றும் பருக்களையும் தடுக்கிறது.

வால்நட்டில் (Walnuts) ணவு வழக்கத்தில் சேர்த்துக்கொண்டால், சருமம் மென்மையடைகிறது. இந்த வால்நட் பருப்பில் காணப்படும் லினோலிக் அமிலம், சருமத்தின் சட்டமைப்பை பராமரிக்க உதவுவதோடு, சருமத்தில் உண்டாகும் பருக்களையும் தடுக்க உதவுகிறது.

பூசணி விதையில் (Pumpkin Seeds) குக்குர்பிடசின் எனப்படும் அமினோ அமிலம் உள்ளதால், அதேபோல் இதில் வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் சருமத்துளைகளில் உள்ள மாச்சுகளை அகற்றி, பருக்கள் பிரச்சனையை தடுக்க உதவும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *