உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? வீட்டிலேய ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யுங்கள்..

நம்மில் பலர், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருப்போம். இதற்கான பலன் கிடைக்க வேண்டும் என பல்வேறு விஷயங்களை செய்த பின்பு, சில நேரங்களில் அந்த பலன் கிடைக்காமல் போகலாம். எடையை குறைப்பதற்கு ஏதேனும் உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. எந்த உடற்பயிற்சியை செய்தால் எந்த தசைக்கு நல்லது, எந்த இடத்தில் தசை குறையும், எந்த தசை வலுவாகும், எவ்வளவு கலோரிகளை அந்த உடற்பயிற்சி குறைக்கும் போன்ற தகவல்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். உடல் எடையை வேகமாக குறைக்க ஒரு சில உடற்பயிற்சிகள் உள்ளன. அதிலும் இவற்றை, வீட்டிலுருந்தவாறே செய்து எடையை எளிமையாக குறைக்கலாம். அவை என்னென்ன உடற்பயிற்சிகள் என்பதை இங்கு பார்ப்போமா?

நடை பயிற்சி:

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையை குறைக்க நல்ல ஏரோபிக் உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. வேகமாக நடப்பது உடலில் உள்ள கலோரிகளை குறைப்பதில் பெரிய பங்கு வகிக்கின்றது. இது, உங்களின் தினசரி நடவடிக்கைகளையும் எளிமையாக்குகிறது. இது குறித்து நடத்தப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகளில், 70 கிலோ எடை இருப்பவர்கள், 30 நிமிட நடைப்பயிற்சியில் 167 கலோரிகளை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கிங்-ஜாக்கிங் ஆகிய இரண்டுமே உடல் எடையை குறைக்கும் நல்ல ஏரோபிக் உடற்பயிற்சிகளாகும்.

எப்படி செய்ய வேண்டும்?

>15 நிமிடம் நடைப்பயிற்சி
>15 நிமிடம் ஜாக்கிங்
>வேகமாக 15 நிமிடங்கள் நடக்க வேண்டும்
>மெதுவாக 10 நிமிடங்கள் ஓட வேண்டும்
>5 நிமிடம் உடலை ரிலாக்ஸ் செய்ய வேண்டும்m

கயிறு தாண்டுதல்:

கயிறு தாண்டுதல் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. இது, உடலையும் வலுவாக்க உதவும். தினமும் கயிறு தாண்டுதல் பயிற்சி செய்வதால், மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை குறைவதாக மருத்துவர்களும் இதன் மூலம் பயனடைந்தவர்களும் தெரிவிக்கின்றனர். இந்த உடற்பயிற்சியினால், இதயத்துடிப்பு அதிகரித்து உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகிறது.

எப்படி செய்ய வேண்டும்?

>தரையில் நேராக முதலி நிற்க வேண்டும்
>இரு கால்களும் நேராக இருக்க வேண்டும்
>இரு கைகளும் இரு தொடைகளுக்கு அருகே ஒட்டியபடி இருக்க வேண்டும்
>பிறகு ஸ்கிப்பிங் செய்ய ஆரம்பிக்க வேண்டும்
>முதல் முறை செய்பவராக இருந்தால் சிறிது நேரம் செய்யத்தொடங்கி, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம்.

ப்ளாங்க்ஸ்:

முழு உடற்பயிற்சிக்கு மிகவும் சிறந்த உதாரணம், ப்ளாங்க் உடற்பயிற்சிதான். இது, உடலில் உள்ள தசைப்பகுதிகளை குறைக்க உதவுகிறது. இதை செய்கையில் தோள்பட்டை, பின்பகுதி, இடுப்பு பகுதி ஆகியவை வலுவடையும். இந்த பயிற்சியை செய்வதால் உடல் எடையை வேகமாக இழக்கலாம் என்கின்றனர், மருத்துவர்கள்.

ஸ்குவாட்:

நம் ஊரில் இதை தோப்புக்கரணம் என்று கூறுவர். இதை கொஞ்சம் மெருகேற்றி உலகம் முழுவதும் ஸ்குவாட் என்ற உடற்பயிற்சியாக செய்கின்றனர். இந்த உடற்பயிற்சியால் உடலில் உள்ள கலோரிகள் குறையும், மேலும் கொழுப்பு சேராமலும் தடுக்கலாம். இதை முதல் முறை செய்பவராக இருந்தால் முதலில், நாள் ஒன்றுக்கு 12-15 ஸ்குவாட்ஸ் வர செய்து பழக வேண்டும். படிப்படியாக இதை உயர்த்திக்கொண்டே போகலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *