தங்கம் சேமிக்க ஆசையா ? உடனே இதை செய்யுங்க..!
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்க பத்திரம் விற்பனை இன்று (12.02.2024 – திங்கள்கிழமை) தொடங்கி, பிப்ரவரி,16-ம் தேதி அதாவது வருகின்ற வெள்ளிக் கிழமை அன்று முடிவடைகிறது.
தங்கப் பத்திரம் என்றால் என்ன?
தங்கப் பத்திரம் என்பது அரசாங்கப் பத்திரமாகும். அதை டிமேட் கணக்குகளில் வாங்கலாம் அல்லது மற்றலாம். இந்த பத்திரம் 1 கிராம் தங்கம், அதாவது பத்திரத்தின் விலை 1 கிராம் தங்கத்தின் விலைக்கு சமமாக இருக்கும். இது இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வெளியிடப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கும் டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கும் ஒரு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கும்.
இறையாண்மை தங்கப் பத்திரத்தில் (Sovereign Gold Bond) நீங்கள் 24 காரட், அதாவது 99.9% சுத்தமான தங்கத்தில் முதலீடு செய்கிறீர்கள். SGB களில் முதலீடுகள் 2.50% வருடாந்திர வட்டி பெறுகின்றன. உங்களுக்கு எதிர்காலத்தில் பணம் தேவைப்பட்டால், இந்த தங்கப் பத்திரத்தின் மீதும் கடன் பெறலாம்.
ஒரு நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1 கிராம் மற்றும் அதிகபட்சம் 4 கிலோகிராம் தங்கத்தை முதலீடு செய்யலாம். நீங்கள் கூட்டு முதலீட்டாளர் எனில், முதலீட்டு வரம்பு 4 கிலோ மட்டுமே. அதேசமயம் எந்த ஒரு அறக்கட்டளை நிறுவனமும் அதிகபட்சமாக 20 கிலோ வரை தங்கத்தை வாங்கலாம்.
SGBகள் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும். முதிர்வு காலம் முடிந்த பிறகு, அதில் கிடைக்கும் லாபத்திற்கு வரி கிடையாது. அதேசமயம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பணத்தை எடுத்தால், அதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு நீண்ட கால மூலதன ஆதாயம் (LTCG) கீழ் 20.80% வரி விதிக்கப்படும். 2015 நவம்பரில் தங்கம் பணமாக்குதல் திட்டத்தின் கீழ் அரசால் சவரன் தங்கப் பத்திரத் வெளியீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த தங்க பத்திரத்திற்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி வழங்கப்படும். அதுவும் உங்கள் வங்கிக் கணக்கிற்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை 2.5% வட்டி நேரடியாக தொடர்ந்து 8 ஆண்டுகளும் செலுத்தப்படும்.
இந்த தங்க பத்திரத்தை அருகிலுள்ள வங்கிகள், Stock Holding Corporation of India Ltd (SHCIL), தபால் அலுவலகங்கள் மற்றும் இந்திய பங்குச்சந்தை நிறுவனங்கள் ஆகிவற்றின் மூலம் வாங்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வாங்குவோருக்கு கிராமிற்கு 50 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும். அதாவது ஒரு கிராம் ரூ.6,263 ஆக உள்ளது, நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பண பரிவர்த்தனை செய்தால் ஒரு கிராம் ரூ.6,213-க்கு நீங்கள் வாங்கலாம்.
நீங்கள் ஆபரணத்தங்கத்தை வாங்கினால் அதற்கு 3% ஜிஎஸ்டி விதிக்கப்படும். ஆனால் இதற்கு நீங்கள் எந்தவித வரியும் செலுத்த வேண்டியது இல்லை என்பது தனிச்சிறப்பு.