லிப்ஸ்டிக் போடாமல் உங்கள் உதடுகள் சிவப்பாக வேண்டுமா? இந்த வீட்டு வைத்தியம் போதும்

பெண்கள் பயன்படுத்தும் பல அழகுசாதன பொருட்களில் லிப்ஸ்டிக் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் உதடுகளும் அழகாக இருந்தால் தான் நமது தோற்றம் அழகாக இருக்கும்.

பெண்களின் முக அழகினை எடுத்துக்காட்டுவதில் உதடுகள் முக்கிய இடம் வகிக்கின்றது. பொதுவாகவே பெண்களில் அதிகமானோர் லிப்ஸ் டிக் பாவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால் லிப்ஸ் டிக் இல்லாமல் வெளியில் போக முடியாது என கூறும் அளவுக்கு இதன் முக்கியத்துவம் அதிகரித்து விட்டது.

மேக்கப் பொருட்களிலும் கூட அதிகம் விற்பனையாவது இந்த லிப்ஸ் டிக் தான் என ஒரு ஆய்வு தகவல் குறிப்பிடுகின்றது.

இவ்வாறு தொடர்சியாக லிப்ஸ் டிக் பாவிப்பதனால் உதடுகளுக்கு போதியளது ஆக்சிஜன் கிடைக்காமல் கருமையாக மாறிவிடுகின்றது.

மேலும் சிலருக்கு வளிமண்டல மாசு காரணமாகவும் காலநிலை மாற்றம் காரணமாகவும் உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்துவிடும்.

இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும். இந்த பிரச்சினையை உடனடியாக சரிச் செய்து உதடுகளை மென்மையாகவும் சிவப்பாகவும் வைத்துக்கொள்வது எப்படி என இந்த பதிவில் பார்ப்போம்.

உதடுகளை சிவப்பாக்கும் வீட்டு வைத்தியம்
பாலாடை மற்றும் நெல்லிக்காய் சாறு ஆகியவற்றை கலந்து உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து, சிவந்த நிறம் உண்டாகும்.

வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை பயன்படுத்துவது மூலம் சிறந்த பயனை பெற முடியும். வெண்ணெயுடன் ஒரெஞ்ச் பழச்சாறு கலந்து, உதடுகளில் பூசி 5 நிமிடம் மசாஜ் செய்து வர உதட்டில் காணப்பட்ட வெடுப்புகள் நீங்கி மென்மையான சிவந்த உதடுகள் கிடைக்கும்.

இரவு படுக்கும்போது தினமும் உதட்டில் மேல் தேங்காய் அல்லது நெய் தடவி வந்தால், குளிர் காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்பு பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது மட்டுமன்றி உதடுகளின் வறட்சி நீங்கி எப்போதும் ஈரலிப்பாக இருக்கும்.

காபி பொடியை எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு சீனி கலந்து உதட்டில் பூசி 5 நிமிடங்கள் மசாஜ் செய்து குளிர்ந்த நீரினால் கழுவினால் உடனடியாக உதட்டின் நிறத்தில் மாற்றம் ஏற்படுவதை பார்க்க முடியும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *