எச்சரிக்கை! சிறுநீரகம், கல்லீரலை காலி செய்யும் வைட்டமின் மாத்திரைகள்
பொதுவாகவே எந்த ஒரு ஊட்டச்சத்தும் அளவிற்கு அதிகமாக ஆனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். உணவின் மூலம் அதிக ஊட்டச்சத்துக்கள் சாப்பிடுவதால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஆனால், ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
வைட்டமின் சப்ளிமெண்ட் மாத்திரைகள்
அளவிற்கு அதிகமாக வைட்டமின் சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொண்டால், இதய நரம்புகளில் அடைப்புகள் ஏற்படும் என்றும், கல்லீரல் சிறுநீரகாமல் பாதிக்கப்படும் என்றும், மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கையின் மூலம், பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதிகப்படியான கால்சியம் மாத்திரைகளால் ஏற்படும் ஆபத்து
அதிக அளவிலான கால்சியம் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால், நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதோடு, சிறுநீரக கற்களை இருக்கும் அபாயமும் (Health Tips) உள்ளது. அதோடு அளவுக்கு அதிகமாக கால்சியம் எலும்புகளில் சேரும்போது, எலும்புகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இருவிதமான சப்ளிமெண்ட்களை ஒன்றாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்
சில சமயங்களில் இரு விதமான, சப்ளிமெண்ட் மாத்திரைகளை ஒன்றாக எடுத்துக் கொள்வதால், ஏற்படும் பக்க விளைவுகள் ஏராளம். உதாரணத்திற்கு இரும்பு சத்து மாத்திரைகளையும், கால்சியம் மாத்திரைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனால் பக்க விளைவுகள் ஏற்படுவதோடு, கால்சியம் சத்து மாத்திரைகள், இரும்பு சத்து உடலில் உறிஞ்சப்படும் ஆற்றலை பாதிக்கும்.