எச்சரிக்கை! நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்யும் ‘சில’ பழக்கங்கள்!
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி என்பது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் நச்சுக்களால் ஏற்படும் நோய்களுக்கு எதிராக உங்கள் உடலின் இயற்கையான பாதுகாப்பாகும். நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் சில விஷயங்கள் உள்ளன. எனவே தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் சில தவறுகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். இந்நிலையில், பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான பழக்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
போதுமான தூக்கம் இல்லாத நிலை
போதுமான தூக்கம் நல்ல ஆரோக்கியத்திற்கு
மிகவும் முக்கியமானது. தூக்கத்தின் போது உங்கள் உடல் சைட்டோகைன்கள் எனப்படும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவும் புரதங்களை வெளியிடுகிறது. போதுமான தூக்கம் இல்லாததால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. ஆராய்ச்சியின் படி, குறைவான தூக்கம் உங்கள் உடலை வைரஸ்கள் மற்றும் கிருமிகளுக்கு இரையாக ஆக்குகிறது. தொற்று நோய்களிலி இருந்து மீளவும் நீண்ட நேரம் எடுக்கும்.
மன அழுத்தம்
ஆராய்ச்சியின் படி, ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலும், நோய் எதிர்ப்பு சக்தி காலியாகிவிடும். வெறும் 30 நிமிடங்களிலேயே உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. எனவே, தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் தாக்கம் என்ன என்பதை ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்?
வைட்டமின் டி குறைபாடு
குளிர்காலத்தில் சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி பெறுவது சற்று கடினமாக இருக்கலாம் ஆனால் சாத்தியமற்றது அல்ல. எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, வைட்டமின் டி குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது மட்டுமல்லாமல் உடலை பலவீனம் அடையச் செய்கிறது. சூரிய ஒளி உடல் படுவதன் மூலம் வைட்டமின்களைப் பெறலாம். இது தவிர, சால்மன், மத்தி, ஹெர்ரிங் மற்றும் கானாங்கெளுத்தி மீன்கள், முட்டை, சிவப்பு இறைச்சி போன்றவற்றிலிருந்தும் வைட்டமின் டி பெறலாம்.