எச்சரிக்கை! கல்லீரலை காலி செய்யும் மிக ஆபத்தான ‘சில’ உணவுகள்…!

கல்லீரல் என்பது செரிமான அமைப்பின் ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பித்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல் மிக்க உறுப்பு கல்லீரல் ஆகும். இதனால்தான் உடலை முழுமையாக ஆரோக்கியமாக வைத்திருக்க, கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். எனவே, கல்லீரலைப் பற்றி கவனக்குறைவாக இருப்பது அதன் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

கல்லீரல் பிரச்சனைகளுக்கு மது அருந்துவது தான் மிக முக்கிய காரணம் என்பது உண்மைதான். ஆனால் கல்லீரல் பிரச்சனைகளை உண்டாக்கும் வேறு பல விஷயங்களும் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா. இதனால் கல்லீரல் மோசமாக பாதிக்கப்படலாம். இன்று, இந்த கட்டுரையின் மூலம், கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் (Health Tips) அத்தகைய உணவுப் பொருட்களைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். அந்த விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்…!

கல்லீரலை சேதப்படுத்தும் சில உணவுகள்

1. சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளது. இது நமது கல்லீரலின் வீக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் நமது கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது நமது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

2. பதப்படுத்தப்பட்ட உணவு

நீண்டநாள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பேக் செய்யப்பட்ட உணவுகள் பல வழிகளில் பதப்படுத்தப்படுகின்றன. அத்தகைய உணவு உங்கள் கல்லீரலுக்கும் ஆபத்தாக முடியும். அத்தகைய சூழ்நிலையில், சிப்ஸ், ஸ்நாக்ஸ் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது நமது கல்லீரல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *