Watch video : விஷால் செய்த குறும்புத்தனம்.. சிரிப்பு வரவைக்கும் யோகி பாபு ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோ விஷால் சமீப காலமாக மாறி மாறி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் ‘ரத்னம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்து வரும் ரகளை சோசியல் மீடியாவில் நாளுக்கு நாள் வைரலாகி வருகிறது.
ஹிட் அடித்த மார்க் ஆண்டனி :
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா, அபிநயா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. அடுத்தடுத்து நடிகர் விஷால் படங்கள் தோல்வியை சந்தித்து வந்ததால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றதுடன் 100 கோடியை தாண்டியும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து சாதனை படைத்தது.
தயாராகும் ரத்னம் :
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது இயக்குநர் ஹரி இயக்கும் ‘ரத்னம்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சம்பந்தி விருந்தில் விஷால் :
அந்த வகையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17ம் தேதியான நேற்று ‘ரத்னம்’ படக்குழுவினருக்கு சமபந்தி விருந்து நடைபெற்றது. அந்த சமபந்தி விருந்தில் சாப்பிட உட்கார்ந்த நடிகர் விஷால் தனக்கே உரித்தான வித்தியாசமான ஸ்டைலில் சாமி கும்பிட்டுவிட்டு உணவில் கை வைக்கிறார். அவரின் அருகில் அமர்ந்து இருந்த யோகி பாபு அமைதியாக அதை பார்த்து விட்டு திரும்பி விடுகிறார். விஷாலின் இந்த தமாஷான வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.