”வரக்கூடாத இடத்துக்கு வந்து மாட்டிக்கிட்டோம் பங்கு” இங்கிலாந்து அணியை வெளுக்கும் தெறி மீம்ஸ்!
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய சுவாரஸ்யமான மீம்ஸை பார்க்கலாம்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பேஸ் பால் அணுகுமுறையுடன் வெற்றிகளை குவித்து வரும் இங்கிலாந்து அணியும், பாரம்பரிய முறைப்படியிலான டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடி வரும் இந்திய அணி மோதும் ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதனை வெளிப்படுத்தும் வகையில் கலகலப்பு படத்தில் அடியாட்களுக்கு பணம் கொடுத்து, “சாயங்காலம் மான் கொம்பு ஃபைட் இருக்கு.. வந்துருங்க” என்பார். அதுபோல் இந்தியா – இங்கிலாந்து கேப்டன்களான ரோகித் – ஸ்டோக்ஸ் புகைப்படத்தை பகிர்ந்து மான் கராத்தே ஸ்டார்ட்ஸ் என்று உருவாக்கப்பட்ட மீம் ஜாலி ரகம்.
முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் மூவரும் இணைந்து விக்கெட் வேட்டையாடினர். டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிகர் ரெடிங் கிங்ஸ்லி, பேயின் முழுக் கதையையும் அறிந்து, “வரக்கூடாத இடத்துக்கு வந்து மாட்டிக்கிட்டோம் மதி” என்று நடிகர் தினாவிடம் கூறுவார். அதுபோல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்-டம், “வரக்கூடாத இடத்துக்கு வந்து மாட்டிக்கிட்டோம் பாஸ்” என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இருவரும் இணைந்து விளையாடி 502 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கூட்டணியாக இரு வீரர்கள் சேர்ந்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். இதனை தில்லு முல்லு படத்தில் வரும் மீசையில்லாத ரஜினி, மீசையுள்ள ரஜினியை வைத்து அஸ்வின் மற்றும் ஜடேஜா ஒப்பிட்டு உருவாக்கியுள்ள மீம் வேற லெவல்.
அதேபோல் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த பென் ஸ்டோக்ஸை மிகச்சிறந்த பந்தின் மூலமாக பும்ரா வீழ்த்தி அசத்தினார். அந்த பந்தில் ஆட்டமிழந்த போதும், பும்ராவை பாராட்டி சென்றா ஸ்டோக்ஸ். அதேபோல் ஏற்கனவே ஒருமுறை ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஆரோன் ஃபின்சை வீழ்த்தி அவரிடமே பாராட்டை பெற்றார். இதனை முதல்வன் படத்தில் அர்ஜூனால் கொல்லப்படும் போது ரகுவரன், That was a good interview என்று கூறுவார். அதனை அப்படியே மாற்றி ஸ்டோக்ஸ் சொல்வதை போல், “That was a good ball தம்பி” உருவாக்கப்பட்டுள்ள மீம் தாறுமாறு ரகம்.