நாடு முழுவதும் உள்ள மசூதிகளை இடித்து கோயில் கட்டும் வரை ஓய மாட்டோம் பாஜக எம்பி பேச்சுக்கு துரை வைகோ பதிலடி

மதுரையில் மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்று உள்ளது. அதில் தேர்தல் நடைமுறை மற்றும் நிதி குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. வருகின்ற தேர்தலில் மதிமுகவின் பங்களிப்பு இந்திய கூட்டணி செயல்பாடுகளில் முக்கிய பங்காக இருக்கும். தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று அதன்படி கூட்டணி குறித்து தலைமையிடம் அதனை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தமிழகத்தில் கூட்டணி தலைவர் தமிழக முதல்வர் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கும் இடங்களை ஏற்று கொண்டு செயல்படுவோம்.

மசூதிகளை இடிக்கும் வரை ஓயமாட்டோம்

கர்நாடக பாஜக எம்.பி. ஆனந்த்குமார் ஹெக்டே பாபர் மசூதி மட்டுமல்ல நாடுமுழுவதும் உள்ள மசூதிகளை இடித்து கோயில் கட்டும் வரை ஓய மாட்டோம் என தெரிவித்துள்ளனர், இது போன்ற மதவாத அரசியல் நாட்டிற்கு மிகவும் எதிரானது. இது இளைஞர்களின் வாழ்க்கையை சூனியம் ஆக்கிவிடும். அன்பே சிவம் தான் இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடு. எந்த ஒரு மதமும் மனிதர்களிடையே வேறுபாடு ஏற்படுத்தி காவு வாங்கி ,கோட்பாடு அமைத்து இறைவனை வழிபட வேண்டும் என தெரிவிக்கவில்லை.

அதிமுகவின் நிலை என்ன.?

அயோதியில் ஒரு மசூதியை இடித்து விட்டு அங்கே ஒரு கோவிலில் கட்டியதன் மூலம் நாட்டில் கலவரம் வெடித்து பல உயிர்களை இழந்தோம். அதிமுகவில் இருந்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தனது நிலைப்பாட்டை சரியாக எடுக்கவில்லை.அங்கு ஒரு கால், இங்கு ஒரு கால் என வைக்க கூடாது என துரைவைகோ தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *