வெதர்மேன் தந்த வார்னிங்..! ஒரு சொட்டு கூட மழை இருக்காதாமே..!
வழக்கமாக மார்ச் 2-வது வாரத்தில் தான் கோடைக்காலம் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இப்போதே பிற்பகல் 11 மணிக்கு மேல் வெளியே செல்ல முடியவில்லை. இப்போதே இப்படியென்றால், ஏப்ரல், மே மாதங்களில் எப்படி இருக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
இந்த சூழலில்தான், நடப்பாண்டு கோடை வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான்தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “தென்னிந்தியாவில் பிப்ரவரி மாதம் வறண்ட வானிலையாகவே முடிவடைந்துள்ளது. மார்ச் மாதமும் மழையை எதிர்பார்க்க முடியாது. அதற்கான அறிகுறிகளும் இல்லை. மார்ச் இறுதியில் மிகவும் வறண்ட வானிலையே இருக்கும். வனப்பகுதிகளில் தீ விபத்துகளும் நேரிட வாய்ப்பு இருக்கிறது. இதை வன்த்துறை கண்காணிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.மார்ச் மாத இறுதியில் வறட்சி அதிகரிக்கும்.. அதீத வெப்பம் பதிவாகும். ஏப்ரல் 1-2ஆவது வாரத்தில் தான் ஓரிரு இடங்களில் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் சென்னை வானிலை ஆய்வு மையமும் கூட அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள் தமிழகத்தில் அதிக வெப்பநிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.
ஆகையால் அடுத்த 2 மாதங்களுக்கு தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழை இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது. கோடைக்காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் போது அவ்வப்போது கோடை மழை பெய்து பூமியை குளிர்விப்பது வழக்கம். இந்த ஆண்டு அந்த மழையும் இருக்காது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகவே உள்ளது.
அப்போ இந்த சம்மர் நம்ம நிலை ??