Web Series: பரபரப்பான வெப்சீரிஸ் மூலம் இயக்கத்தில் கம்பேக்! சேரனின் ஜர்னி ரிலீஸ் தேதி இதோ

எதார்த்த படங்களின் மூலம் முத்திரை பதித்த இயக்குநராக திகழ்ந்தவர் சேரன். சினிமாவை விட்டு முதல் முறையாக தற்போது ஓடிடி தொடர் ஒன்றை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களின் ஒருவராக திகழ்ந்து வந்தவர் சேரன். எதார்த்துடன் கூடிய கமர்ஷியல் படங்கள் மூலம் ரசிகர்கள் விருந்து படைத்துள்ளார். இதையடுத்து ஆட்டோகிராப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சேரன்.

இந்த படத்தின் மாபெரும் வெற்றி மூலம் இயக்கம், நடிப்பு என இரட்டை குதிரை சவாரி செய்து வந்தார். வெற்றி, தோல்வி என சேரனின் சினிமா பயணம் மாறி மாறி இருந்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக ஓடிடி பக்கம் திரும்பியுள்ளார்.

சோனி லிவ் ஓடிடி தளத்துக்காக ஜர்னி என்ற பெயரில் புதிய வெப் சீரிஸை இயக்கியுள்ளார் சேரன். இதில் நடிகர்கள் சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், திவ்யா பாரதி, காஷ்யப் பார்பயா பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜெயப்பிரகாஷ், வேலராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், மறைந்த இயக்குநர், நடிகர் மாரிமுத்து, இளவரசு, அஞ்சு குரியன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். மொத்தம் 6 எபிசோடுகள் கொண்ட தொடராக ஜர்னி தயாராகியுள்ளது.

இதையடுத்து பெங்கல் ஸ்பெஷலாக ஜர்னி வெப் சீரிஸ் ஜனவரி 12ஆம் தேதி முதல் ஸ்டிரீம் ஆகவுள்ளது. இந்த வெப்சீரிஸின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு பிரபல நிறுவனத்தின் நேர்முக தேர்வில் வேலைக்காக தேர்வாகியிருக்கும் 5 பேரில், ஒருவரை மட்டும் வேலைக்காக எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்படுகிறது. அந்த வேலை யாருக்கு கிடைத்தது என்பதை சுவாரஸ்யம் மிக்க திரைக்கதையுடன் சொல்லும் விதமாக இந்த வெப்சீரிஸ் அமைந்திருப்பதாக தெரிகிறது.

இந்த தொடருக்கு இசை – சி. சத்யா. ஒளிப்பதிவு – என்கே ஏகாம்பரம்.

இயக்குநர் சேரன் கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார். 2019இல் வெளியான விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம் ரசிகர்களையும் கவர்ந்தது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவு வசூலை குவிக்கவில்லை.

இந்த படத்துக்கு பிறகு திரைப்பட இயக்கத்தில் இருந்து ஒதுங்கியிருந்த சேரன் ராஜாவுக்கு செக், ஆனந்தம் விளையாடும் வீடு, தமிழ் குடிமகன் போன்ற படங்களில் நடித்தார். இதைத்தொடர்ந்து ஜர்னி படம் மூலம் மீண்டும் இயக்கத்துக்கு கம்பேக் கொடுத்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *