தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள்.. கல்யாண பொண்ணு ரகுல் ப்ரீத் சிங்கின் ஸ்டைலிஷ் கிளிக்ஸ்..

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான கில்லி என்ற கன்னட படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
தமிழில் தடையற தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்க வில்லை என்றாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறினார்.
எனினும் தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். சமீபத்தில் அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். மேலும் இந்தியன் 2, இந்தியன் 3 படத்திலும் நடித்து வருகிறார்.
இதனிடையே ஹிந்தியில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங் தொடந்து ஹிந்தி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானிக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அதன்படி வரும் 21-ம் தேதி ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்னானிக்கு கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது.
உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள உள்ளனர். தங்கள் திருமணம் குறித்து ரகுல் – ஜாக்கி வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ரகுலும், ஜாக்கியும் தங்கள் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளின் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடிய பச்சை நிற ஷரராவில் க்யூட்டாக போஸ் கொடுக்கிறார் ரகுல்.
இதே போல் பிளாக் கலர் வெல்வெட் குர்தா அணிந்திருக்கும் புகைப்படத்தை ஜாக்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சிறந்த விஷயங்கள் நடக்க போகிறது என்ற கேப்ஷனையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த நட்சத்திர ஜோடியின் புகைப்படங்களுக்கு வாழ்த்துக்களும், லைக்களும் குவிந்து வருகின்றன.