மும்பை இந்தியன்ஸ்-க்கு ஆப்பு.. சிஎஸ்கே எடுத்த அதிரடி முடிவு.. இனி வட இந்தியாவிலும் சிஎஸ்கே ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2024 ஐபிஎல் தொடரில் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வட இந்தியாவில் அதிக அளவில் ரசிகர்கள் இல்லை என்ற நிலை உள்ளது. அங்கெல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக ரசிகர்கள் இருப்பதே முக்கிய காரணம். அந்த அணியின் ரசிகர்களை கொத்தாக தூக்க முடிவு செய்து இருக்கிறது சிஎஸ்கே.

எனவே, சிஎஸ்கே அணி வட இந்தியாவில் ரசிகர்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. 2024 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில், அவர் இருக்கும் போதே இந்த வேலையை செய்ய வேண்டும் என்பதால் இந்த ஆண்டு முதல் நடவடிக்கையை துவங்கி உள்ளது.

அதன் முதல் திட்டமாக பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்பை சிஎஸ்கே அணியின் தூதராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். பாலிவுட் நடிகையை தூதராக அறிவித்து விட்டால் வட இந்தியாவில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து விடுமா? என்றால் அது நிச்சயம் நடக்காது. ஆனால், சிஎஸ்கே ஆடும் போட்டிகளின் போது கத்ரினா கைஃப் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக இருக்கும் போது, அதை பார்க்கும் வட இந்திய ரசிகர்களுக்கு, சிஎஸ்கே அணி சற்று நெருக்கமான அணியாக மாறும். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிஎஸ்கே ரசிகர்கள் எண்ணிக்கையில் பெரிய போட்டியை ஏற்படுத்தும்.

தற்போது அதிக ரசிகர்கள் எண்ணிக்கை கொண்ட அணிகளில் மும்பை இந்தியன்ஸ் முதல் இடத்திலும், சிஎஸ்கே இரண்டாம் இடத்திலும் உள்ளன. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதை அந்த அணியின் ரசிகர்கள் பலர் அதை விரும்பவில்லை. அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களாக இனி இருக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளனர். அவர்களை தங்கள் அணியின் ரசிகர்களாக மாற்றும் ஒரு முயற்சியாகவும் சிஎஸ்கே அணியின் இந்த முடிவு இருக்கும்.

இதுவரை சிஎஸ்கே என்றால் தோனி என்பதை தாண்டி அவர்களுக்கு பெரிய ஈர்ப்பு இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால் எங்கோ தெற்கில் இருக்கும் அணி என்ற எண்ணத்தை மாற்றி நமக்கு நெருக்கமான அணி என அவர்களையும் நினைக்கத் தூண்ட வேண்டும் என முடிவு செய்தே சிஎஸ்கே அணி கத்ரினா கைஃப்பை தூதராக நியமித்து இருக்கிறது. இதற்கு முன்பு பெரும்பாலும் தென்னிந்திய நடிகர், நடிகைகளையே தூதராக நியமித்து இருக்கிறது சிஎஸ்கே.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *