இது என்ன புது ட்விஸ்ட்..! மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் அதிமுக கூட்டணியை அறிவிப்போம்..!
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ… இப்படியாக, சிறிய கட்சிகள் மட்டுமே அதிமுக கூட்டணியை உறுதி செய்துள்ளன. ஆனால், பெரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் எந்த முடிவையும் எட்டப்படாமல் இருக்கிறது.
தொடக்கத்தில் பாமக, தேமுதிக என இரு கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இந்த இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இரு கட்சிகளும் கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவுடன் இணைந்து பயணித்தனர். பாமக 7 தொகுதியிலும்., தேமுதிக 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
இந்நிலையில் அதிமுக கூட்டணி அமைப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், அதிமுக கூட்டணியை அறிவிப்போம் என்றும் தேர்தல் பரப்புரைகளை இன்று முதல் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார். இன்று முதல் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். விஷமத் தனதான பிரசாரத்தை பரப்பி வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் விரைவில் வரும்” எனவும் கூறினார்.