சேலரி ஸ்லிப் என்னென்ன இடம்பெற்று இருக்கும்… எதெல்லாம் முக்கியம்? முழு விவரம் இதோ
உங்களுக்கு ஒரு புதிய வேலை கிடைத்திருக்கிறது என்றால் அந்த வேலைக்கான சம்பளம் உங்களது அக்கவுண்டில் டெபாசிட் செய்யப்பட்டு உங்களிடம் ஒரு சேலரி ஸ்லிப் (Salary slip) வழங்கப்படும். சேலரி ஸ்லிப் என்பது உங்கள் சம்பளம் தொடர்பான மொத்த விவரங்களையும் வழங்கக்கூடியது. நீங்கள் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாற்றமாகும் பொழுது புதிய நிறுவனம் உங்களது பழைய சேலரி ஸ்லிப்பை கேட்பார்கள். அதன் அடிப்படையில் உங்களுக்கான சம்பள பேக்கேஜ் முடிவு செய்யப்படுகிறது.
அடிப்படை சம்பளத்தை தவிர பல்வேறு விதமான அலவன்ஸ்கள் சேலரி ஸ்லிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பளம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் குழப்பங்கள் இருக்கும் பட்சத்தில் சேலரி ஸ்லிப்பில் இருந்து அதனை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு சேலரி ஸ்லிப்பில் எந்தெந்த விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அடிப்படை சம்பளம் (Basic salary) :
சேலரி ஸ்லிப்பில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பகுதி உங்களது பேசிக் சேலரி. ஏனென்றால் உங்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து பலன்களும் உங்களின் பேசிக் சேலரியின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகிறது.
அடிப்படை சம்பளம் என்பது உங்களது மொத்த சம்பளத்தில் 35 முதல் 50 சதவீதம் வரை இருக்கலாம். இந்தப் பணம் வரிக்கு உட்பட்டது.
ஹவுஸ் ரெண்ட் அலோவன்ஸ் (House Rent Allowance – HRA) :
ஹவுஸ் ரெண்ட் அலோவன்ஸ் என்பது உங்களின் அடிப்படை சம்பளத்தை பொறுத்து கொடுக்கப்படுகிறது. உங்களது அடிப்படை சம்பளத்தில் 40 முதல் 50 சதவீதம் HRA ஆக வழங்கப்படலாம். இது உங்களது சேலரி ஸ்லிப்பில் இருக்கக்கூடிய பெரும்பான்மையான வரிக்கு உட்பட்ட ஒரு பகுதி.
டியர்னஸ் அலோவன்ஸ் (Dearness Allowance – DA) :
டியர்னஸ் அலோவன்ஸ் என்பது உங்களின் அடிப்படை சம்பளத்தை பொறுத்து மாறுபடும். ஆனால் டியர்னஸ் அலோவன்ஸ் 50 சதவீதத்தை அடைந்தவுடன், அது மீண்டும் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு, 50% -இன் படி எம்ப்ளாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பணமானது அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும், அதாவது குறைந்தபட்ச சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்.
கன்வேயன்ஸ் அலோவன்ஸ் (Conveyance allowance) :
பணி நிமித்தமாக நீங்கள் பயணம் செல்ல நேரிட்டால் உங்களுக்கு கன்வேயன்ஸ் அளவன்ஸ் வழங்கப்படும். இந்த பயணத்திற்காக நீங்கள் செலவு செய்யக்கூடிய பணமானது உங்கள் கையில் நீங்கள் வாங்கும் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். அதாவது ஒருவேளை உங்களுக்கு 1600 ரூபாய் வரை கன்வேயன்ஸ் அலோவன்ஸ் கிடைக்கிறது என்றால் அந்த பணத்திற்கு நீங்கள் எந்த ஒரு வரியும் செலுத்த தேவையில்லை.
லீவ் டிராவல் அலோவன்ஸ் (Leave Travel Allowance) :
லீவ் டிராவல் அலோவன்ஸ் என்பது பெரும்பாலும் LTA என்று அழைக்கப்படுகிறது. LTA -இன் கீழ் எம்ப்ளாயிகள் மற்றும் அவர்களது குடும்பம் நாட்டில் வேறு எங்கேயும் பயணம் சென்றதற்கான செலவுகளை ரீஇம்பர்ஸ் செய்வதற்கு நிறுவனங்கள் அனுமதிக்கிறது. LTA இன் கீழ் பெறப்படும் பணத்திற்கு வரி கிடையாது.
லீவ் டிராவல் அலோவன்ஸ் தொகையானது உங்களுடைய ரேங்க் மற்றும் போஸ்ட் அடிப்படையில் நிறுவனத்தின் HR மற்றும் பொருளாதார துறையால் நிர்ணயிக்கப்படுகிறது.
மெடிக்கல் அலோவன்ஸ் (Medical Allowance) :
நிறுவனத்தில் சேவை செய்து கொண்டிருக்கும்பொழுது ஆகக்கூடிய மருத்துவ செலவுகளுக்கு எம்ப்ளாயிகளுக்கு மெடிக்கல் அலோவன்ஸ் வழங்கப்படுகிறது.
ஆனால் இந்த சலுகையை பில் மூலமாகவே நீங்கள் கிளைம் செய்ய முடியும். உங்களது மருத்துவ செலவுகளுக்கான சான்றாக நீங்கள் மருத்துவமனையில் வழங்கப்பட்ட ரசீதை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு ஆண்டுக்கான மருத்துவ செலவுகள் 15,000 ரூபாய்க்கு உள்ளாக இருக்கும் பட்சத்தில் அதற்கு வரி செலுத்த தேவையில்லை.
ஸ்பெஷல் அலோவன்ஸ் (Special allowance) :
எம்ப்ளாயிகளை ஊக்குவிப்பதற்காக சன்மானத்தின் பெயரில் ஸ்பெஷல் அலோவன்ஸ் வழங்கப்படுகிறது. இது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். ஆனால் இந்த தொகை முற்றிலுமாக வரிக்கு உட்பட்டது.
பெர்ஃபார்மன்ஸ் போனஸ் (Performance Bonus) :
வேலையில் உங்களது செயல் திறனின் அடிப்படையில் வேரியபிள் பே மற்றும் பெர்ஃபார்மன்ஸ் போனஸ் வழங்கப்படும்.
உங்களது வேலை பார்க்கும் திறனின் அடிப்படையில் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ இந்த போனஸ் வழங்கப்படும். உங்களுக்கு எவ்வளவு போனஸ் கொடுக்க வேண்டும் என்பதை நிறுவனமே முடிவு செய்யும்.
வருங்கால வைப்பு நிதி (Provident Fund) :
வருங்கால வைப்பு நிதி ஒவ்வொரு மாதமும் உங்களது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. இது உங்களது அடிப்படை சம்பளம் மற்றும் DA -வில் 12 சதவீதம் ஆகும்.
இதைத்தவிர இதே அளவிலான ஒரு தொகையை எம்ப்ளாயரும் உங்களது PF அக்கவுண்டில் டெபாசிட் செய்வார்.
ப்ரொஃபஷனல் டாக்ஸ் (Professional tax) :
உங்களுடைய வரி வரம்பின் அடிப்படையில் உங்களது சம்பளத்திலிருந்து ஒரு பகுதி ப்ரொஃபஷனல் டேக்ஸ் ஆக பிடிக்கப்படுகிறது. இது ஒரு மறைமுக வரி. இந்த வரியானது கர்நாடகா, மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேஷ், தெலுங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், அசாம், சத்தீஸ்கர், கேரளா, மேகாலயா, ஒடிசா, திரிபுரா, ஜார்கண்ட், பீகார் மற்றும் மத்திய பிரதேஷ் போன்ற மாநிலங்களில் மட்டுமே செல்லுபடி ஆகும்.