ஜேர்மன் பாஸ்போர்ட் வைத்திருப்பதால் என்னென்ன பயன்கள்?
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் எளிதில் ஜேர்மன் குடியுரிமை பெறும் வகையிலும், இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதை அனுமதிக்கும் வகையிலும் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது அந்நாட்டு அரசு.
இந்நிலையில், ஜேர்மன் பாஸ்போர்ட் வைத்திருப்பதால் என்னென்ன பயன்கள் என்று இக்கட்டுரையில் பார்க்கலாம்.
உலகின் வலிமையான பாஸ்போர்ட்களில் ஜேர்மன் பாஸ்போர்ட்டும் ஒன்றாகும். ஜேர்மன் பாஸ்போர்ட் வைத்திருந்தால், நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்கலாம், குடிபெயரலாம் மற்றும் பணியும் செய்யலாம்.
ஜேர்மன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 150 நாடுகளுக்கு விசா இல்லாமலே பயணிக்கலாம், 30 நாடுகளுக்கு விசா இல்லாமலே சென்று, அங்கு சென்று இறங்கியதும் விசா பெற்றுகொள்ளலாம்.
மேலும், நீங்கள் ஜேர்மன் பாஸ்போர்ட் வைத்திருந்தால், ஜேர்மனிக்குள் நுழையும்போது, எந்த கட்டுப்பாடுகளுமின்றி ஜேர்மனிக்குள் நுழைய முடியும்
நீங்கள் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குச் சென்றிருக்கும்போது, அங்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அங்குள்ள ஜேர்மன் தூதரகத்தின் உதவியை நாடமுடியும். அப்படி உங்களுக்கு ஜேர்மன் தூதரகத்தால் உதவி செய்யமுடியாத நிலைமை ஏற்பட்டால், நீங்கள் ஒரு ஐரோப்பிய ஒன்றிய குடிமகன் என்பதால், ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றின் உதவியையும் நாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.