என்னது.. அத்தை, மாமன் மகளை திருமணம் செய்யக் கூடாதா? பொது சிவில் சட்டம் வைத்த செக்!!

நாட்டிலேயே முதல் மாநிலமாக நேற்று உத்தராகண்ட மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பாஜக ஆட்சி நடந்து வரும் உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு முதலே பொது சிவில் சட்ட முன்வரைவு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சட்ட முன் வடிவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதை தொடர்ந்து சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்பட்டு, பொது சிவில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையிலும் நேற்று அம்மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதில் திருமணம், சொத்து உள்ளிட்டவை தொடர்பாக மதங்களுக்கு ஏற்ப பின்பற்றப்பட்டு வந்த சட்டங்கள் நீக்கப்பட்டு பொதுவான சட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் யாரை எல்லாம் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற பட்டியலும் உள்ளது. அதன்படி அத்தை, மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள முடியாது.

பொதுசிவில் சட்டம் : யாரை எல்லாம் திருமணம் செய்ய தடை?

1.அம்மா
2. தந்தையின் விதவை மனைவி
3.தாயின் தாய்
4. தாய் வழி தாத்தாவின் விதவை மனைவி
5. தாய் வழி பாட்டியின் தாய் ( கொள்ளுப்பாட்டி)
6. தாய் வழி பாட்டியின் தந்தையின் விதவை மனைவி
7. தாய் வழி தாத்தாவின் தாய்
8. தாய் வழி தாத்தாவின் தந்தையின் விதவை மனைவி
9. தந்தையின் தாய்
10. தந்தை வழி தாத்தாவின் விதவை மனைவி
11. தந்தை வழி பாட்டியின் தாய்
12. தந்தை வழி பாட்டியின் தந்தையின் விதவை மனைவி
13. தந்தை வழி தாத்தாவின் தாய்
14. தந்தை வழி தாத்தாவின் தந்தையின் விதவை மனைவி
15. மகள்
16. மகனின் விதவை மனைவி
17. மகள் வழி பேத்தி
18. மகள் வழி பேரனின் விதவை மனைவி
19. மகன் வழி பேத்தி
21. மகள் வழி பேத்தியின் மகள்
22. மகள் வழி பேத்தி மகனின் விதவை மனைவி
23. மகன் வழி பேரனின் மகள்
24. மகன் வழி பேரனின் மகனின் விதவை மனைவி
25. மகன் வழி பேத்தியின் மகள்
26. மகன் வழி பேத்தியின் மகளின் விதவை மனைவி
27. மகன் வழி பேரனின் மகள்
28. மகன் வழி பேரன் மகனின் விதவை மனைவி
29. சகோதரி
30. சகோதரியின் மகள்
31. சகோதரனின் மகள்
32. தாயின் சகோதரி
33. தந்தையின் சகோதரி
34. தந்தையின் சகோதரனின் மகள்
35. தந்தையின் சகோதரியின் மகள்
36. தாயின் சகோதரியின் மகள்
37. தாயின் சகோதரின் மகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *