பெண்களின் இரத்த சோகைக்கு காரணம் என்ன?
பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகைக்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வு என்ன என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இரத்த சோகை
பெண்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும் இரத்த சோகை. இந்தியாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்த சோகை பொதுவாக உடம்பில் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகின்றது. மாதவிடாய் மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் ரத்தப் போக்கு, மட்டுப்படுத்தப்பட்ட உணவு மற்றும் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.
இரும்புச்சத்து உடம்பில் குறைவால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவும் குறைகின்றது. இதனையே இரத்த சோகை என்று கூறுகின்றனர்.
மூச்சுத்திணறல், பலவீனம், வெளிர் தோல் இவைகள் அறிகுறியாக இருக்கின்றது. பழங்கள், கீரை, ப்ரோக்கோலி, பூசணி, பீட்ரூட், கேரட் இவற்றினை தினமும் எடுத்துக்கொண்டால் குறைபாட்டை குறைக்கலாம்.
அனைத்து வகையான பருப்புவகைகள், முளைத்த கொண்டைக்கடலை, பீன்ஸ், சோயாபீன்ஸ் இவற்றில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சோகையை குணப்படுத்துகின்றது.
சால்மன் போன்ற கடல் மீன்களிலும், வாழைப்பழம் மற்றும் திராட்சை பழங்களில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கின்றது.
இதே போன்று மாம்பழம், எலுமிச்சை, கொய்யா போன்ற பழங்களையும், முந்திரி, பாதாம், திராட்சை, பேரீச்சம்பழத்தையும் சாப்பிட்டால் இரும்புச்சத்து அதிகரித்து, ரத்த சோகையை கட்டுப்படுத்துகின்றது.