கல்லீரல் புற்றுநோய் ஏற்பட காரணம் என்ன? மருத்துவரின் கூற்று
கல்லீரல் புற்றுநோய் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் சில எச்சரிக்கை அறிகுறிகளை கூறியுள்ளார்.
கல்லீரல் புற்றுநோய் என்பது மிகவும் அரிதான ஒரு பாதிப்பு ஆகும். இந்த புற்றுநோய்க்கு பெண்களை விட ஆண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.
கல்லீரல் புற்றுநோய் பாதிப்பிற்கு தமிழ்நாட்டில் ஒரு வருடத்திற்கு சுமார் 2400 பேர் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.
இந்த புற்றுநோய் 5 நிலைகளில் இருக்கின்றன. ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் இவர்களின் ஆயுளை 70% அதிகரிக்கச்செய்யலாம்.
ஆனால் இந்த புற்றுநோய் அபாயத்தை 4-வது நிலைகளில் கண்டுபிடித்துவிட்டால் இவர்கள் உயிர் வாழ்வது என்பது 30% குறைவான வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.
கல்லீரல் புற்றுநோய் ஏற்பட காரணம்
ஹெபடைடிஸ் B வைரஸ்
ஹெபடைடிஸ் C வைரஸ்
ஆல்கஹாலின் சிரோசிஸ்
கல்லீரலில் கொழுப்பு படிதல் போன்றவற்றால் இந்த புற்றுநோய் ஏற்படுகின்றன.
ஹெபடைடிஸ் B வைரஸ் தடுப்பூசி 6, 10, 14-வது வாரத்தில் குழந்தைகளுக்கு செலுத்துவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் குறைவு.
பச்சை குத்துவதனால் ஹெபடைடிஸ் C வைரஸ் நம் உடலில் வர வாய்ப்புகள் அதிகம். இதற்கு தடுப்பூசிகள் கிடையாது.
ஒவ்வொரு செல்களும் தானாக அழியக்கூடியது. அந்த செல்கள் அழியாமல் மேலும் மேலும் வளர்ச்சியடைவதன் காரணமாக இந்த புற்றுநோய் ஏற்படுகிறது.
கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள்
காரணமில்லாத எடை இழப்பு
மேல் வயிற்று வலி
குமட்டல் மற்றும் வாந்தி
சோர்வு மற்றும் பலவீனம்
இரத்த வாந்தி
மஞ்சள் நிற கண்கள்
வெள்ளை மலம்
மதுபழக்கத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.