டி.ராஜேந்தருக்கு என்ன ஆச்சு?… நிவாரண பொருட்கள் வழங்கும் இடத்தில் திடீரென ஏற்பட்ட பரபரப்பு!…
தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் தனக்கென தனி அங்கீகாரத்தை உருவாக்கியவர் நடிகர் டி.ராஜேந்தர். இவர் நடிகரை தாண்டி சிறந்த இயக்குனர் மற்றும் பாடகரும் கூட. தனித்துவமான தனது நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
ஒரு தலை ராகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் கிளிஞ்சல்கள், உயிருள்ளவரை உஷா போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையை மிகச்சிறப்பாக வெளிக்காட்டியவர்.
ரஜினி, கமல், கார்த்தி என பல முன்னணி கதாநாயகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் டி.ஆர்.ராஜேந்தர். தனது அடுக்குமொழி வசனங்கள் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர்.
பின் அரசியல் மீது கொண்ட ஆர்வத்தினா அரசியலிலும் குதித்தார். ஆனால் அவரால் அந்த அளவிற்கு அரசியலில் ஈடு கொடுக்கமுடியவில்லை என்றுதான் கூறவேண்டும். தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி, என் ஆசை மைதிலியே போன்ற பாடல்களின் மூலம் பாடகராகவும் வலம் வந்தார்.
பின் தனது மகனான சிலம்பரசனின் படங்களில் கெளரவ தோற்றத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வந்தார்.
ஆனால் திடீரென அவருக்கு கூட்டத்தில் மயக்க ஏற்பட மயங்கி விழுந்துவிட்டார். பின்னர் உடன் இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுக்க பின் மயக்க நிலையில் இருந்தவர் மீண்டும் எழுந்துவிட்டார். ஆனால் அவர் மயங்கி விழுந்ததற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. வயதானதால் ஒரு வேளை இவ்வாறு நடந்திருக்கலாம் என மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.